அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அந்நிய ஒழுங்கற்ற நிலைக்குப் பின்னால் அடையாளம் காணப்பட்ட பொறிமுறையை ஆப்டிகல் தரவு பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்புகளுக்கு பயன்படுத்தலாம்

Posted On: 17 OCT 2024 12:11PM by PIB Chennai

"ஹைப்பர் யூனிஃபார்மிட்டி" என்று அழைக்கப்படும் மிகை சீரான தன்மை குறித்து சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அந்நிய ஒழுங்கற்ற நிலையில் உருவாகும் பொருளின் பின்னணியில் உள்ள நடைமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மிகை சீரான தன்மை என்பது சில பலபடித்தான ஊடகங்களின் ஒரு பண்பாகும். இதில் நீண்ட அலைநீள வரம்பில் அடர்த்தி ஏற்ற இறக்கங்கள் பூஜ்ஜியமாக சிதைகின்றன. குவாசிகிரிஸ்டல்கள், பிரபஞ்சத்தின் பெரிய அளவிலான கட்டமைப்புகள், மென்மையான மற்றும் உயிரியல் குழம்புகள் மற்றும் கூழ்மங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளில் ஹைப்பர்யூனிஃபார்ம் ஒழுங்கற்ற பொருட்கள் காணப்படுகின்றன.

நிறை, ஆற்றல் மற்றும் மின்னூட்டம் ஆகியவை இயற்கையில் எங்கும் நிறைந்துள்ளதுடன், மேக கூட்டம் உருவாதல், பொருட்கள் வழியாக வெப்பம் மற்றும் மின்னூட்டம் வாயிலாக நுண்ணிய ஊடகங்களில் பனிச்சரிவுகள், நதி கட்டமைப்புகள், மலைத்தொடர்களின் உருவாக்கம் மற்றும் செல்களில் நீர்த்துளிகளின் சுய ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களை வெளிப்படுத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065669

-----

MM/KPG/DL



(Release ID: 2065916) Visitor Counter : 10


Read this release in: English , Urdu , Hindi