தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு

Posted On: 17 OCT 2024 6:19PM by PIB Chennai

தொழிலாளர் நல தலைமை இயக்குநரகம் மேற்கொண்டுள்ள நலத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் புதுதில்லியில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் நல தலைமை இயக்குநரகம் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பீடி, திரைப்பட, நிலக்கரி சுரங்கப்பணி அல்லாத தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக தற்போதுள்ள மத்திய மற்றும் மாநில திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளர்களை நலத்திட்டங்களுடன் இணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர், அமைப்புசாரா தொழிலாளர்களின் பல்வேறு பிரிவுகளைக் கொண்ட வழிகாட்டுதல்களின் கீழ் ஒரு நிலையான செயல்நடைமுறைகள், உருவாக்கப்படலாம் என்றும், அவற்றை மத்திய, மாநில நலத்திட்டங்களான பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் போன்றவற்றின் கீழ்  இணைக்கலாம் என்றும்  அவர் கூறினார். அதன் மூலம் அவர்களுக்கு ஆயுள் காப்பீடு, சுகாதார பலன்கள், ஓய்வூதியம், வீட்டுவசதி, கல்வி மற்றும் பிற நன்மைகளுக்கான சமூகப் பாதுகாப்பை வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065875

***

IR/AG/DL


(Release ID: 2065910) Visitor Counter : 66


Read this release in: English , Urdu , Hindi