நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை சிறப்பு முகாம் 4.0 ஐ கடைப்பிடித்தது
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2024 3:26PM by PIB Chennai
உணவு மற்றும் பொது விநியோகத் துறை, அதன் பொதுத்துறை நிறுவனங்கள், சார்நிலை / இணைக்கப்பட்ட அலுவலகங்களுடன் இணைந்து சிறப்பு பிரச்சாரம் 4.0 ஐ 2 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31, 2024 வரை செயல்படுத்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சிறப்பு பிரச்சாரம் 4.0 டிஜிட்டல் மயமாக்கல், அலுவலக இடங்களை மேம்படுத்துதல், சரியான நேரத்தில் கழிவுகளை அகற்றுதல், அலுவலக பதிவுகளை களையெடுத்தல் / பாதுகாத்தல், உள்ளடக்கிய நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது . பொதுமக்களின் குறைகள் மற்றும் மேல்முறையீடுகள், நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமர் அலுவலகம், அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான குறிப்புகள் மற்றும் நாடாளுமன்ற உத்தரவாதங்கள் நிலுவையில் உள்ளவற்றுக்கு தீர்வு கண்டு எண்ணிக்கையை குறைப்பதிலும் இது கவனம் செலுத்துகிறது.
அடையாளம் காணப்பட்ட நிலுவையிலுள்ள குறிப்புகளை அப்புறப்படுத்துதல், பதிவேடுகளை நிர்வகித்தல் / பழைய ஆவணங்களை களையெடுத்தல், மின் கோப்புகளை முடித்து வைத்தல், கழிவுகளை அப்புறப்படுத்தி இடவசதியை உருவாக்குதல் மற்றும் அலுவலக வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் மாற்றுதல் போன்ற ஒருங்கிணைந்த முயற்சிகளை இத்துறை மேற்கொண்டு வருகிறது. 16.10.2024 நிலவரப்படி நிலுவையில் உள்ள குறிப்புகள் / மின்-கோப்புகளை முடித்து வைத்தல், பழைய கோப்புகளை களையெடுத்தல், விடுவிக்கப்பட்ட இடம் மற்றும் வருவாய் உருவாக்கங்களின் நிலை பின்வருமாறு:-
மாநில அரசு மேற்கோள்கள்-16, MP குறிப்புகள்-1, பொதுமக்கள் குறைதீர்ப்பு-500, பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீடு-160, கோப்புகள் களையெடுக்கப்பட்டவை-6364,மின்-கோப்புகள் முடித்து வைக்கப்பட்டவை-4222, தூய்மை முகாம்கள் நடத்தப்பட்டவை -644, இடம் விடுவிப்பு-60284 சதுர அடி, வருவாய்- ரூ.96269/-
*****
PKV/KV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2065853)
வருகையாளர் எண்ணிக்கை : 81