இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு நிர்வாக திருத்த மசோதா 2024 குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார்

Posted On: 17 OCT 2024 3:01PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர், டாக்டர். மன்சுக் மாண்டவியா தலைமையில் இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு, மற்றும் தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் புதுதில்லியில் இன்று தேசிய விளையாட்டு நிர்வாக திருத்த மசோதா 2024 குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே, தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் திருமதி பி.டி. உஷா, ஒலிம்பிக் பிரிவு இயக்கப்பிரதிநிதிகள், மத்திய அமைச்சகங்களின் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய டாக்டர். மாண்டவியா, சிறப்பான மற்றும் ஒருங்கிணைப்பை வளர்க்கும் வலுவான மற்றும் வெளிப்படையான விளையாட்டு சூழலை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். ", ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் உட்பட சர்வதேச தரத்துடன் இணைந்து இந்தியாவில் வலுவான மற்றும் வெளிப்படையான விளையாட்டு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணியில் தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2024 ஒரு மைல்கல் என்று தெரிவித்தார். நமது விளையாட்டு சமூகத்தின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில், கொள்கைகளை வடிவமைப்பதற்காக பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களின் தீவிர ஈடுபாடு முக்கியமானது என்று அவர் கூறினார்.

 இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்புகள்,  தேசிய விளையாட்டு கூட்டமைப்பு ஆகியவற்றின் பல்வேறு பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். 

வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். தங்களது கருத்துகளை draft.sportsbill[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியில் 25.10.2024க்குள் அமைச்சகத்திற்கு அனுப்பலாம் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065733

***

IR/AG/KR


(Release ID: 2065794) Visitor Counter : 57