சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரி என் ஐ டி –யில் புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Posted On:
17 OCT 2024 12:33PM by PIB Chennai
புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழக இயக்குனர் முனைவர் மகரந்த் மாதவ் காங்ரேகரின் பரிந்துரையின் பெயரில் நாட்டு நலப் பணித் திட்டம், தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரி, தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டம், காரைக்கால் மாவட்ட சுகாதார சங்கம் ஆகியவை இணைந்து புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதன்கிழமை (16.10.2024) அன்று நடத்தினர்.
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் புகையிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சமூகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் தகவல் தரும் செய்திகளை விநியோகிப்பதும் ஆகும்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காரைக்கால் வரிச்சிக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். நந்தினி விக்னேஷ் கலந்துகொண்டு புகையிலை விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். மேலும் அவர், புகையிலையின் கலவை, புகைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகள், புகைபிடித்தல் மற்றும் புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் ஆகியவற்றை விளக்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், காரைக்கால் வாரிச்சிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவ அலுவலர் டாக்டர் தியாகராஜன், சுகாதார ஆய்வாளர் திரு பாலசுந்தரம், சுகாதார உதவியாளர் ஜெ கார்த்திகேயன், பல்கலைக் கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன், டீன் (மாணவர் நலன்) முனைவர் செந்தில் குமார், இணை டீன் (மாணவர் நலன்) முனைவர். வாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் புகையிலை விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
***
PKV/KR
(Release ID: 2065678)
Visitor Counter : 87