அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

11-வது இந்தியா - ஸ்வீடன் புதிய கண்டுபிடிப்பு தினத்தில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்

Posted On: 14 OCT 2024 4:51PM by PIB Chennai

இந்தியா, ஸ்வீடன் இடையே பல்வேறு நிலைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அழைப்பு விடுத்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகளில் உலகத் தலைவர்களில் ஒன்றாக ஸ்வீடன் திகழ்கிறது என்று அவர் கூறினார். உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு  2024-ல், ஐரோப்பாவில் உள்ள 39 நாடுகளில் இரண்டாவதாகவும் 133 உலகளாவிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும் உள்ளது.

11-வது இந்தியா - ஸ்வீடன் புதியகண்டுபிடிப்பு தின விழாவில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். 2024-ம் ஆண்டிற்கான கருப்பொருள் "அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்திற்குப் பசுமை வளர்ச்சியை விரைவுபடுத்துதல்” என்பதாகும்.

கண்டுபிடிப்புத் துறையில் நாட்டின் வளர்ச்சி குறித்து பார்வையாளர்களுக்குத் தெரிவித்த டாக்டர் ஜிதேந்திர சிங், "கண்டுபிடிப்பு குறியீடுகளில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு  2024-ல், மத்திய மற்றும் தெற்காசியாவில் உள்ள 10 பொருளாதாரங்களில் இந்தியா முதலாவது இடத்திலும், 133 பொருளாதாரங்களில் 39-வது இடத்திலும் உள்ளது" என்றார். வரும் ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த தலைவர்களை இந்தியா நிச்சயம் எட்டிப்பிடிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளிட்ட ஆராய்ச்சி, கல்வி, கண்டுபிடிப்பு, தொழில்துறை, தொழில்முனைவு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறினார்.

வளர்ந்து வரும் இந்தியா-ஸ்வீடன் கூட்டாண்மையில் ஆராய்ச்சியும் புதிய கண்டுபிடிப்புகளும் முக்கிய அம்சங்களாக  உள்ளன. 11-வது இந்தியா - ஸ்வீடன் புதியகண்டுபிடிப்பு தினம் நமது கூட்டாண்மையின் தற்போதைய முக்கியத்துவத்தையும் வெற்றியையும் பிரதிபலிக்கிறது. 2021 முதல் இந்த விழாவில் அமைச்சர் தொடர்ந்து பங்கேற்பது, ஸ்வீடனுடனான அதன் கண்டுபிடிப்பு கூட்டாண்மைக்கு இந்தியா அளித்துள்ள முக்கியத்துவத்தின் வலுவான சமிக்ஞையாகும்.

பல்வேறு இந்திய மற்றும் ஸ்வீடன் அரசு முகமைகள் இந்தத் தொழில்நுட்பங்களுக்கு (எடுத்துக்காட்டாக  டி.எஸ்.டி., டி.பி.டி). கூட்டாக நிதியுதவி செய்கின்றன.  இந்திய, ஸ்வீடன் பல்கலைக்கழகங்களுக்கு இடையே விரிவான, வளர்ந்து வரும் ஆராய்ச்சி ஒத்துழைப்பும் இதில் அடங்கும். ஸ்வீடனின் முன்னணி பல்கலைக்கழகங்களான கரோலின்ஸ்கா, கே.டி.எச், சால்மர்ஸ் மற்றும் பிற முன்னணி இந்திய பல்கலைக்கழகங்களுடன் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. தனியார் துறையையும் ஈடுபடுத்துவதன் மூலம் இதை மேலும் வலுப்படுத்த முடியும்.

இந்த நிகழ்ச்சியில் இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். ஸ்வீடனின் துணைப் பிரதமரும், எரிசக்தி மற்றும் தொழில் துறை அமைச்சருமான திருமதி எபா புஷ் உரையாற்றினார். இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் ஜான் தெஸ்லெஃப் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

----

SMB/DL



(Release ID: 2064826) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi