சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), சென்னை கிளை அலுவலகம் உலக தர நிர்ணய தினம் 2024 நிகழ்ச்சியை இன்று சென்னையில் நடத்தியது

Posted On: 14 OCT 2024 5:10PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) என்பது மத்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டப்பூர்வமான அமைப்பாகும். இது உற்பத்தி சான்றிதழ் (ISI Mark), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலைப்பொருட்கள் மற்றும் ஆய்வக சேவைகளின் ஹால் மார்க்கிங் போன்ற பல்வேறு திட்டங்களை தொழில்துறையின் நலனுக்காகவும் அதையொட்டி நகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகவும் செயல்படுத்தி வருகிறது.

 

14 அக்டோபர் 2024 (திங்கட்கிழமை) இன்று , இந்திய தர நிர்ணய அமைவன சென்னை கிளை அலுவலகம், உலக தர நிர்ணய தின நிகழ்ச்சியை [மானக் மஹோத்சவ்] சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தியது. உலக தர நிர்ணய தினத்தை கொண்டாடும் விழாவில் தொழில் வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் BIS இன் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநர் திருமதி ஜி. பவானி, தனது வரவேற்புரையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று ISO,IEC மற்றும் ITU உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உலக தர நிர்ணய தினத்தை கொண்டாடுகிறார்கள். சர்வதேச தரங்களாக வெளியிடப்படும் தன்னார்வ தொழில்நுட்ப ஒப்பந்தங்களை உருவாக்கும் ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளுக்கு கௌரவப்படுத்தும் ஒரு வழிமுறையாக இது உள்ளது என்று தெரிவித்தார்.

 

பிஐஎஸ் தென் மண்டல துணை தலைமை இயக்குநர் திரு பிரவீன் கன்னா, நிகழ்ச்சியின் நோக்கங்கள் மற்றும் உலக தரநிலைகள் தினத்தின் கருப்பொருளை கோடிட்டு காட்டினார். நீடித்த வளர்ச்சிக்கான பல்வேறு இலக்குகள் குறித்து பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்த அவர், நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தரநிலைகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை விளக்கினார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக BIS 10,000-க்கும் மேற்பட்ட தரநிலைக் கழகங்களைக் கொண்டுள்ளது மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்காக அடிமட்ட அளவில் 3500 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

 

தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ். நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். டாக்டர் ராதாகிருஷ்ணன் தனது தலைமை உரையின் போது, ​​பங்குதாரர்களின் நலனுக்காக, BIS மேற்கொண்டுவரும் தர மேம்பாட்டு முயற்சிகளை பாராட்டினார். டாக்டர் ராதாகிருஷ்ணன், மக்கள் தங்க நகைகளை வாங்கும் போது மட்டும் அல்ல, மற்ற எல்லா பொருட்களையும் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் BIS பற்றி மனதில் யோசிக்க வேண்டும் என்று கூறினார். அனைத்து ரேஷன் கடைகளையும் தர மேலாண்மை அமைப்பு 9001:2015-ன் கீழ் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் பிஐஎஸ்-ன் பல்வேறு திட்டங்கள் மற்றும் பங்குதாரர்களுக்காக நடத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் முன்னிலையில் பல்வேறு பங்குதாரர்களால் தர உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னர், சுமார் 41 தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அலுவலர்கள் , தரநிலைகள் கிளப் வழிகாட்டிகள், BIS ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கான ஸ்பான்சர்கள், தரநிலை மேம்பாட்டிற்கு BIS க்கு உதவிய தொழில்துறையினர், அகில இந்திய BIS முதல் உரிமம் பெற்றவர்கள், ஊடகப் பணியாளர்கள் போன்ற BIS திட்டங்களுக்கு தீவிர ஆதரவை வழங்கிய சுமார் 41 பணியாளர்கள் BIS விருதுகளை பெற்று மானக் வீர் என்று பாராட்டப்பட்டனர்.

டாக்டர். இந்துமதி எம். நம்பி, பேராசிரியர், சிவில் இன்ஜினியரிங் துறை, ஐஐடி- மெட்ராஸ் மற்றொரு கெளரவ விருந்தினர். தனது உரையின் போது, அவர் தனது உரையின் போது, ​​தரநிலைகள் மற்றும் நிலைத்தன்மை என்பது பற்றி பேசுகையில் பருவநிலை மாற்றம், நிலச் சீரழிவு மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை இழப்பு ஆகியவை கிரக நெருக்கடியாக மாறி வருகின்றன என்றார். புதுப்பிக்க முடியாத வளங்களை முழுமையாக நம்பியிருக்கும் சமீபத்திய வாழ்க்கை முறை ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்தார். பிளாஸ்டிக் Vs காகித பயன்பாட்டின் நன்மைகள் மற்றும் தீமைகளையும் அவர் விளக்கினார், மேலும் வாழ்க்கைச் சுழற்சி மதிப்பீடுகள் மட்டுமே நமக்கு எது நல்லது என்பதை மட்டுமே தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டார். கன உலோகங்கள், மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற வடிவங்களில் வெளிவரும் புதிய இரசாயனங்கள் நமது பூகோளத்திற்கும் பெரும் பிரச்னையாகி வருகின்றன என்றும் , தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை அமைவனங்கள் இச்சிக்கல்களைச் சமாளிப்பது சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக தரமேம்பாடு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணைகள் குறித்து இந்திய தர நிர்ணய அமைப்பால் மேற்கொள்ளப்படும் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து இந்திய தர நிர்ணய அமைப்பால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்திய தர நிர்ணய அமைப்பின் திரு கௌதம் பி ஜே, விஞ்ஞானி டி / இணை இயக்குநர், பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம் விளக்கமளித்தார். பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி டி/ இணை இயக்குநர் திரு அருண் புச்சகல்யா உலக தர நிர்ணய தின செய்தியை வாசித்தார்.

நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்

 

 

 

***

 



(Release ID: 2064703) Visitor Counter : 65


Read this release in: English