வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில், 2024, செப்டம்பர் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு எண் (அடிப்படை ஆண்டு: 2011-12)

Posted On: 14 OCT 2024 12:00PM by PIB Chennai

அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான வருடாந்தர பணவீக்க விகிதம் 2024 செப்டம்பர் மாதத்தில் (செப்டம்பர், 2023 க்கு கூடுதல்) 1.84% ஆக இருந்தது.(தற்காலிகமானது). 2024 செப்டம்பரில் கூடுதலான பணவீக்க விகிதத்திற்கு முதன்மையாக உணவுப் பொருட்கள் உற்பத்தி, மோட்டார் வாகனங்களின் உற்பத்தி, டிரெய்லர்கள், செமி-டிரெய்லர்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி போன்றவற்றின் விலை அதிகரிப்பு காரணமாகும்.

முதன்மைப் பொருட்களின் பணவீக்க விகிதம் 6.59% ஆகவும், எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்க விகிதம் -4.05% ஆகவும், உற்பத்திப் பொருட்களின்  பணவீக்க விகிதம் 1.00% ஆகவும், உணவுக் குறியீட்டெண் 9.47 ஆகவும் இருந்தது.

தற்காலிக மொத்த விலைக் குறியீட்டெண் விவரங்கள், மொத்த விலைக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படி திருத்தியமைக்கப்படும். இந்த செய்திக்குறிப்பு, http://eaindustry.nic.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.

அடுத்த செய்தி வெளியீட்டு தேதி: 2024 அக்டோபர் மாதத்திற்கான மொத்தவிலைக் குறியீட்டெண் 14/11/2024 அன்று வெளியிடப்படும்.

குறிப்பு: தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) இந்தியாவின் மொத்த விலை குறியீட்டெண்ணை ஒவ்வொரு மாதமும் 14 ஆம் தேதி (அல்லது அடுத்த வேலை நாள்) இரண்டு வார கால இடைவெளியுடன் வெளியிடுகிறது. இந்தக் குறியீட்டெண் நிறுவன ஆதாரங்கள் மற்றும் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி அலகுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் தொகுக்கப்படுகிறது. இந்த செய்திக்குறிப்பில் செப்டம்பர் 2024 (தற்காலிக), ஜூலை, 2024 (இறுதி) மற்றும் பிற மாதங்கள்/ஆண்டுகளுக்கான மொத்த விலைக் குறியீட்டெண் (அடிப்படை ஆண்டு 2011-12=100) உள்ளது. மொத்த விலைக் குறியீட்டெண்ணின் தற்காலிக புள்ளிவிவரங்கள் 10 வாரங்களுக்குப் பின் (குறிப்பு மாதத்திலிருந்து) இறுதி செய்யப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2064586

******

SMB/RR


(Release ID: 2064624) Visitor Counter : 65