வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில் துறையினருடன் கலந்துரையாடல் கூட்டம்: உத்தராகண்டில் வர்த்தகத் துறை நடத்தியது

Posted On: 11 OCT 2024 6:26PM by PIB Chennai

 

இந்தியாவில் இருந்து அடிப்படை ஏற்றுமதியை விரிவுபடுத்த, இந்திய அரசின் வர்த்தகத் துறை, 2024 அக்டோபர் 09 அன்று டேராடூனில் தொழில் தொடர்புக் கூட்டத்தை நடத்தியது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வர்த்தகத்துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் கலந்து கொண்டார். இந்த தொழில்துறை கலந்துரையாடல் கூட்டம் மத்திய அரசு, உத்தரகண்ட் அரசின் அதிகாரிகள், முக்கிய தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் இடையே ஒரு ஆக்கபூர்வமான உரையாடலை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

பொது, தனியார் கூட்டு சங்கமமான இந்த நிகழ்வு , உத்தராகண்டின் வேளாண் வணிகம், பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதித் துறைகளின் திறனை பயன்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட அர்த்தமுள்ள உரையாடலுக்கு வழிவகுத்தது. உத்தராகண்டின் வளமான வேளாண்-பருவநிலை நன்மைகளின் உத்திசார் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பதில் அதன் பங்கையும் இதில் கலந்து கொண்டவர்கள் எடுத்துரைத்தனர். 

ஏற்றுமதி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க உத்தராகண்டின் தொழில்துறை தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகளுக்கு இடையிலான உரையாடலை தொழில்துறை தொடர்பு கூட்டம் ஊக்குவித்தது. கரிம வேளாண்மை, தோட்டக்கலை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாரம்பரிய கைவினைப்பொருட்கள் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி, இந்தியாவின் ஏற்றுமதி இலக்குகளுக்கு உத்தரகண்டின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான உத்திகளை விவாதிக்க இது ஒரு தளத்தை வழங்கியது.

உத்தராகண்டின் வேளாண் ஏற்றுமதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சில இந்த நிகழ்வின்போது கையெழுத்திடப்பட்டன. 

**************** 

PLM/KV


(Release ID: 2064375) Visitor Counter : 37


Read this release in: English , Urdu , Hindi