அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதிய புற்றுநோய் சிகிச்சை இலக்கு நோயாளிகளுக்கு தற்போதைய சிகிச்சைகளின் தாக்கத்தை சமாளிக்க உதவும்
Posted On:
10 OCT 2024 1:41PM by PIB Chennai
டி.டி.பி 1 (TDP1) எனப்படும் டி.என்.ஏ பழுது நீக்கு நொதியை செயல்படுத்துவதன் மூலம், புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு நம்பிக்கைக்குரிய புதிய இலக்கை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இது ஒரு கூட்டு சிகிச்சையை பரிந்துரைக்கிறது. தற்போதைய புற்றுநோய் சிகிச்சைகளின் தாக்கத்தை சமாளிக்க இது ஒரு சாத்தியமான துல்லியமான மருந்தாக இருக்கலாம்.
தற்போதுள்ள காம்ப்டோதெசின், டோபோடெக்கான், இரினோடெகான் போன்ற கான்சர் எதிர்ப்பு மருந்துகள் டோபோஐசோமெரேஸ் 1 (டாப் 1) எனப்படும் டி.என்.ஏ பிரதிபலிப்பு மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்கு முக்கியமான ஒரு நொதியை எதிபார்க்கின்றன. புற்றுநோய் செல்கள் பெரும்பாலும் இத்தகைய ஒற்றை-தன்மை சிகிச்சைகளுக்கு எதிர்ப்பை உருவாக்குகின்றன. எனவே மாற்று சிகிச்சை முறைகள் தேவைப்படுகின்றன.
இதுபோன்ற சிகிச்சை முறைகளை ஆராய்வதற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான கொல்கத்தாவின் இந்திய அறிவியல் மேம்பாட்டு சங்க விஞ்ஞானிகள், உயிரணுப் பிரிப்பின் போது புற்றுநோய் செல்கள் டி.என்.ஏவை எவ்வாறு சரிசெய்கின்றன மற்றும் டாப் 1 என்ற நொதியை குறிவைக்கும் கீமோதெரபிக்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதை ஆராய்ந்தனர்.
எம்போ ஆராய்ச்சி இதழ் 2024-ல் வெளியிடப்பட்ட ஆய்வு இரண்டு முக்கிய புரதங்களை எடுத்துக்காட்டுகிறது . அவை சைக்ளின்-சார்ந்த கைனேஸ் 1 (CDK1) மற்றும் டைரோசில்-டிஎன்ஏ பாஸ்போடிஸ்டெரேஸ் 1 (TDP1). ஆகும். பேராசிரியர் பேனு பிரதா தாஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், டி.என்.ஏ பழுது நீக்கும் நொதியான டி.டி.பி 1 -ஐ செயல்படுத்துவதன் மூலம் புற்றுநோய் செல்கள் தற்போதுள்ள மருந்துகளின் விளைவை எதிர்க்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர்.
உயிரணுப் பிரிப்பின் போது புற்றுநோய் செல்கள் டி.என்.ஏவை எவ்வாறு சரிசெய்கின்றன மற்றும் டோபோஐசோமெரேஸ் 1 (டாப் 1) என்ற நொதியால் தூண்டப்பட்ட டி.என்.ஏ சேதத்திற்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதை ஆராயும் போது, விஞ்ஞானிகள் டி.என்.ஏ பழுது நீக்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் சி.டி.கே 1 மற்றும் டி.டி.பி 1 புரதங்களின் முக்கியமான பாத்திரங்களை கண்டுபிடித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063775
*****
SMB/KR
(Release ID: 2063836)
Visitor Counter : 53