பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

ஒளிமயான எதிர்காலத்திற்காக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்

Posted On: 10 OCT 2024 9:27AM by PIB Chennai

ஆண்டுதோறும் அக்டோபர் 11 அன்று கொண்டாடப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், உலகெங்கிலும் உள்ள சிறுமிகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக திகழ்கிறது. இந்த நாள் பாலின சமத்துவம், கல்வி மற்றும் இளம் பெண்களுக்கான வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த நாள் பெண்கள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான நினைவூட்டலாகவும் உள்ளது. மேலும், அவர்கள் தங்கள் எதிர்காலத்தை வழிநடத்துவதற்கும் வடிவமைப்பதற்கும் கருவிகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

1995-ம் ஆண்டில், பெய்ஜிங்கில் நடந்த பெண்கள் பற்றிய உலக மாநாடு, உலகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக, இதுவரை ஏற்படுத்தப்பட்ட மிகவும் முற்போக்கான, கட்டமைப்பான பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான தளத்தை, மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன. முதன்முறையாக, இந்தப் பிரகடனம், குறிப்பாக, சிறுமிகளின் தனித்துவமான உரிமைகளை அங்கீகரித்ததுடன் அவர்களின் தனித்துவமான தேவைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள, விரிவான உலகளாவிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தது.

இந்த உலகளாவிய வேகத்தை அடிப்படையாகக் கொண்டு,ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, 2011 டிசம்பர் 19 அன்று தீர்மானம் 66170-ஐ நிறைவேற்றி, அக்டோபர் 11-ஐ சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அறிவித்தது. இந்த நாள், சிறுமிகளின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும், உலகளவில் அவர்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான தடைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பெண் குழந்தைகள் தினம், சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது. ஆண்களைப் போலவே, வளரிளம் பருவப் பெண்களுக்கும் ஆண்களைப் போலவே, கல்வி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான சம வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக இது அமைந்துள்ளது. பெண்கள் அவர்கள் வளரும் காலத்தில் திறம்பட ஆதரிக்கப்பட்டால், அவர்கள் நாளைய தொழிலாளர்கள், தொழில்முனைவோர், தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்களாக மாறுவதற்கான சக்தியைப் பெறுவார்கள். இது உலகெங்கிலும் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

எதிர்காலத்திற்கான பெண்கள் பார்வை  கருப்பொருள் 2024

இந்த ஆண்டுக்கான சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் Girls' Vision for the Future என்பதாகும்.யுனிசெஃப் நடத்திய ஆய்வில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில், மாணவிகள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நாளும், உலகெங்கிலும் உள்ள பெண்கள் ஒரு பார்வையை நோக்கி செயல்படுகிறார்கள், அதில் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள், அதிகாரம் அளிக்கப்படுகிறார்கள்.

ஆனால், அவர்களால் தனியாக இதை சாதிக்க முடியாது. அவர்களுக்கு கூட்டாளிகள் தேவை. அரசு, சமூகம் மற்றும் தனிநபர்கள், அவர்களின் தேவைகளைக் கேட்டு பதிலளிக்கிறார்கள். பெண்கள் சரியான வளங்கள் மற்றும் வாய்ப்புகளுடன் ஆதரிக்கப்படும்போது, அவர்களின் திறன் வரம்பற்றது. அவர்கள் வழிநடத்தும்போது, அதன் நேர்மறையான தாக்கம் அவர்களைத் தாண்டி அவர்களின் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்கு நீண்டுள்ளது.

பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக ஏன் குரல் கொடுக்க வேண்டும்

பெண்ணாகப் பிறந்தோம் என்ற எளிய உண்மை ஒருவரின் எதிர்காலத்தின் வேகத்தை தீர்மானிக்கக்கூடாது. துரதிருஷ்டவசமாக, உலகெங்கிலும் உள்ள லட்சக் கணக்கான சிறுமிகளுக்கு, அவர்களின் பாலினம் இன்னும் அவர்களின் விருப்பங்களை கட்டுப்படுத்துகிறது, அவர்களின் எதிர்காலத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் அவர்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுக்கிறது.பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளபடி புள்ளி விவரங்கள் ஒரு நிதானமான  போக்க எடுத்துரைக்கின்றன.

இருப்பினும், இந்த சவால்கள் சமாளிக்க முடியாதவை அல்ல. சரியான முயற்சிகள் மற்றும் கூட்டு முயற்சிகளுடன், ஒவ்வொரு பெண்ணும் வெற்றிபெறத் தேவையான சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் திறன்களை அணுகக்கூடிய எதிர்காலத்தை நோக்கி முன்னேற்றத்தை விரைவுபடுத்த முடியும்.

இந்திய அரசியலமைப்பில் பாலின சமத்துவம்

இந்திய அரசியலமைப்பு, பாலின சமத்துவக் கொள்கையை நிலைநிறுத்துகிறது. இது பெண்களுக்கு சமத்துவத்தை உத்தரவாதம் செய்வது மட்டுமல்லாமல், பல நூற்றாண்டுகளாக சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பாகுபாட்டை எதிர்கொள்ள உறுதியான நடவடிக்கைகளை எடுக்க, அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பாலின அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் அடிப்படை உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. அவர்கள் சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்புக்கு உரிமை பெற்றுள்ளனர், மேலும், இழிவான நடைமுறைகளிலிருந்து விடுபட்டு, பெண்களின் கண்ணியத்தை நிலைநிறுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வெறும் கொள்கை மட்டுமல்ல. இது பொருளாதார, கலாச்சார, சமூக மற்றும் அரசியல் துறைகளில் சம வாய்ப்புகளைக் கோர அனுமதிக்கும் ஒரு உருமாறும் செயல்முறையாகும். வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் முடிவுகளை எடுக்கும் திறன் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான சமூக மாற்றத்தில் செல்வாக்கு செலுத்தும் திறன் ஆகியவை இதில் அடங்கும்.

பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள்: அரசு முயற்சிகள்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெண்களின் மொத்த மக்கள் தொகை 58.75 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதில், அவர்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது. அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வது, அவர்களின் தனிப்பட்ட நல்வாழ்வுக்கு மட்டுமல்ல, சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் முக்கியமானது. குறிப்பாக, சிறுமிகளின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை அங்கீகரிப்பதும் நிலைநிறுத்துவதும் மிகவும் சமத்துவமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அவசியம்.

சமூகத்தில் சிறுமிகளின் முக்கியப் பங்கை அங்கீகரித்து, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட, விரிவான திட்டங்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற முன்முயற்சிகள், கல்வி மற்றும் திருமணத்திற்கான சேமிப்பை ஊக்குவிப்பதன் மூலம், பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்குமான முயற்சிகளை எடுத்துக் காட்டுகின்றன. 2015-ல் தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டம்) சுகன்யா சம்ரிதி யோஜனா), பெற்றோர்கள் தங்களது மகள்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது, நிதி பாதுகாப்பு மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்கிறது. இவை தவிர, வளரிளம் பெண்களுக்கான திட்டம் (SAG) மற்றும் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆகியவை பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்கின்றன. உடான் என்பது 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு புதுமையான திட்டமாகும், இது மதிப்புமிக்க பொறியியல் நிறுவனங்களில், மாணவிகளின் குறைவான சேர்க்கையை நிவர்த்தி செய்வதும், பள்ளிக் கல்வி மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மே 2008-ல் தொடங்கப்பட்ட இடைநிலைக் கல்விக்கான சிறுமிகளுக்கான தேசிய ஊக்கத் திட்டம் (NSIGSE), சிறுமிகளுக்கு, குறிப்பாக ஷெட்யூல்டு வகுப்பினர், (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உடான் மற்றும் இடைநிலைக் கல்விக்கான பெண்களுக்கான தேசிய ஊக்கத்தொகை திட்டம் போன்ற கல்வி முயற்சிகள், கல்விக்கான அணுகலை மேம்படுத்தவும், இடைநிற்றல் விகிதத்தைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பதற்கான சட்ட நடவடிக்கைகள், பல முக்கிய முயற்சிகளை உள்ளடக்கியது. குழந்தைத் திருமண தடைச் சட்டம், 2006, குழந்தைத் திருமணத்தில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம், குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், 2012, குழந்தை துஷ்பிரயோகத்தை தடுக்கிறது. அதன் செயல்பாட்டை மேம்படுத்த 2020 இல் புதுப்பிக்கப்பட்ட விதிகளுடன். இளைஞர் நீதிச் சட்டம், 2015, தேவைப்படும் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. காணாமல் போன குழந்தைகளுக்கு உதவகுழந்தை உதவி எண் மற்றும் டிராக் சைல்ட் போர்டல் போன்ற சேவைகளுடன் வாத்சல்யா இயக்கம், குழந்தை மேம்பாடு மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது. குழந்தைகளைக் கண்காணிக்கும் இணையதளம் 2012-ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. காவல் நிலையங்களில் 'காணாமல் போன' குழந்தைகள், குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் (சிசிஐ) வசிக்கும் 'கண்டுபிடிக்கப்பட்ட' குழந்தைகளுடன் பொருத்துவதற்கு இந்த இணையதளம் உதவுகிறது. பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ரன் திட்டம் கொவிட்-19-ஆல் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறது. கூடுதலாக, நிம்ஹான்ஸ் மற்றும் இ-சம்பார்க் திட்டத்துடன் இணைந்து செயல்படுவது, மனநலம் மற்றும் மருத்துவ கவனிப்பை வழங்குகிறது.

ஒன்றாக, இந்த முயற்சிகள் பாதுகாப்பான சூழலை வளர்க்கின்றன, இந்தியாவில் சிறுமிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கின்றன.

நடவடிக்கைக்கு அழைப்பு

சிறுமிகளை ஆதரிப்பதற்கான அவசர நடவடிக்கையின் அவசியத்தை மிகைப்படுத்த முடியாது. பெண்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்வது, நமது உலகளாவிய சமூகத்தின் கூட்டு எதிர்காலத்திற்கான நேரடி முதலீடாகும். இந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில், ஒவ்வொரு சிறுமியின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், அவர்களின் முழு திறனை அவர்கள் உணர உதவுவதற்கும், நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். செயல்பட வேண்டிய நேரம் இது, பெண்கள் செழித்தோங்கும்போது, சமூகம் செழிக்கும்!

*** 

 

(Release ID: 2063699)

MM/KPG/KR


(Release ID: 2063800) Visitor Counter : 96