கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் இ-டிரைவ் திட்டம் : பசுமை எதிர்காலத்தை நோக்கிய வாகனப் போக்குவரத்து முன்முயற்சி

Posted On: 09 OCT 2024 4:42PM by PIB Chennai

ரூ.10,900 கோடி நிதி ஒதுக்கீட்டில் அண்மையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்த 'புதுமையான வாகன மேம்பாட்டிற்கான பிரதமரின் மின்சாரப் போக்குவரத்துப் புரட்சி (PM E-DRIVE- PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement)' திட்டம், 2024, அக்டோபர் 01, முதல் நடைமுறைக்கு வந்துள்ளது, இது 2026 மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும். மின்சார வாகனங்களை (EV) ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவது, சார்ஜிங் உள்கட்டமைப்பை நிறுவுதல், நாட்டில் வலுவான மின்சார வாகன உற்பத்திச் சூழல் அமைப்பை உருவாக்குவது ஆகியவை இதன் முதன்மை நோக்கமாகும்.

பிரதமரின் இ-டிரைவ் முன்முயற்சி போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கிறது. மின்சார வாகனங்களுக்கான சலுகைகளை வழங்குவதன் மூலமும், சார்ஜிங் உள்கட்டமைப்பை  ஊக்குவிப்பதன் மூலமும், மின்சார வாகனப் போக்குவரத்தை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டம் போக்குவரத்து தொடர்பான சுற்றுச்சூழல் தாக்கங்களைக் குறைக்கவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கும். அதே நேரத்தில் தற்சார்பு இந்தியா முன்முயற்சியில்  மின்சார வாகன உற்பத்தித் துறையை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.

இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனம், பதிவு செய்யப்பட்ட இ-ரிக்ஷாக்கள்,   இ-ஆம்புலன்ஸ்கள், மின்சார லாரிகள், மின்சார பேருந்துகள் ஆகிய அனைத்துக்கும் இத்திட்டம் ஆதரவளிக்கிறது.

பரிசோதனை முகமைகளை மேம்படுத்துதல் கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள சோதனை முகமைகளை தரம் உயர்த்துதல், நவீனப்படுத்துதல், போன்றவற்றின் மூலம் பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மத்திய அரசின் இந்த முயற்சி நிலையான போக்குவரத்து தீர்வுகளை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டம் இந்தியாவில் போக்குவரத்தில் மாசுபாடு இல்லாத தூய்மையையும், நிலையான எதிர்காலத்தையும் உருவாக்குவதை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063515

---

 

PLM/KPG/DL


(Release ID: 2063606) Visitor Counter : 51


Read this release in: English , Urdu , Hindi , Manipuri