வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்க-இந்திய வர்த்தக பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 04 OCT 2024 6:49PM by PIB Chennai

அமெரிக்க வர்த்தக அமைச்சர்  ஜினா ரைமோண்டோ-வுடன் இணைந்து  வாஷிங்டனில் மத்திய வர்த்தக அமைச்சர்  திரு பியூஷ் கோயல், 2024,  அக்டோபர் 3 அன்று 6-வது அமெரிக்க-இந்திய வர்த்தக பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். புதுதில்லியில் மார்ச் 2023-ல் நடைபெற்ற 5-வது அமைச்சர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் செயலாக்கம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குறைகடத்திகள், புதுமை கண்டுபிடிப்புகள், எரிசக்தி,  இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு, கனிமங்கள் போன்றவற்றின் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தியாவில் அமெரிக்க வர்த்தகத் துறையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை அமெரிக்க அமைச்சர் பாராட்டினர்.

பயணம், சுற்றுலாத் துறையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் இந்த வர்த்தக உரையாடல் அமைந்தது.

***

PLM/KPG/DL


(रिलीज़ आईडी: 2062214) आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी