கலாசாரத்துறை அமைச்சகம்
பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது
Posted On:
04 OCT 2024 4:44PM by PIB Chennai
"பாலி மொழி" என்ற சொல் ஒரு நவீன சொல்லாடலாகும் அதன் சரியான தோற்றம் அறிஞர்களிடையே விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டு வரை, பாலி என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட மொழி எதுவும் இல்லை. பாலி மொழி பற்றிய மிகத் தொன்மையான குறிப்புகள் புத்தகோசர் என்ற பௌத்த அறிஞரின் விளக்கவுரைகளில் காணப்படுகின்றன. பாலியின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் வெளிவந்துள்ளன. மேக்ஸ் வாலேசர் (ஜெர்மன் இந்தியவியலாளர்) பாலி மொழி "படால்" அல்லது "படலி" என்பதிலிருந்து பெறப்பட்டது என்று கூறுகிறார். இது பாடலிபுத்திர மொழியுடனான தொடர்பைக் குறிக்கிறது. ஆர்.சி. சைல்டர்ஸ் (பிரிட்டிஷ் ஓரியண்டலிஸ்ட் மற்றும் முதல் பாலி-ஆங்கில அகராதியைத் தொகுத்தவர்) பாலி மொழி சாதாரண மக்களால் பேசப்படும் ஒரு வட்டார மொழி என்று நம்பினார். அதே நேரத்தில், ஜேம்ஸ் அல்விஸ் (இலங்கையின் காலனித்துவ சகாப்த சட்டமன்ற உறுப்பினர்) அதை கௌதம புத்தரின் காலத்தில் நடைமுறையில் இருந்த மகத மொழியாக அடையாளம் கண்டார். மகதி என்பது பாலியின் அசல் பெயர் என்றும், பேரரசர் அசோகரின் காலம் வரை இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் அல்விஸ் வாதிட்டார்.
பண்டைய இந்தியாவின் வரலாற்றை புனரமைக்க பாலி பற்றிய ஆய்வு முக்கியமானது. ஏனெனில் அதன் இலக்கியங்கள் கடந்த காலத்தைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும் பொருட்களில் நிறைந்துள்ளன. இருப்பினும், பல பாலி நூல்கள் எளிதில் அணுக முடியாத கையெழுத்துப் பிரதிகளில் மறைக்கப்பட்டுள்ளன. இலங்கை, மியான்மர், தாய்லாந்து போன்ற பௌத்த நாடுகளிலும், பௌத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிட்டகாங், ஜப்பான், கொரியா, திபெத், சீனா, மங்கோலியா போன்ற பகுதிகளிலும் பாலி மொழி தொடர்ந்து படிக்கப்படுகிறது.
பாலி என்பது பல்வேறு பேச்சுவழக்குகளிலிருந்து நெய்யப்பட்ட ஓர் அழகிய திரைச்சீலையாகும். இது பண்டைய இந்தியாவில் பௌத்த மற்றும் சமண பிரிவுகளால் தங்கள் புனித மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கி.மு. 500 வாக்கில் வாழ்ந்த புத்தர் தனது போதனைகளை வழங்க பாலி மொழியைப் பயன்படுத்தினார். இது அவரது போதனைகளைப் பரப்புவதற்கான அடிப்படை ஊடகமாக மாறியது. பௌத்த இலக்கியத்தின் முழு தொகுப்பும் குறிப்பாக திரிபிடகம், பாலி மொழியில் இயற்றப்பட்டுள்ளது.
முதலாவது வினய பிடகம். இது பௌத்த துறவிகளுக்கான துறவற விதிகளை கோடிட்டுக் காட்டுகிறது, நெறிமுறை, நடத்தை மற்றும் சமூக வாழ்க்கைக்கான கட்டமைப்பை வழங்குகிறது.
இரண்டாவது சுத்த பிடகம். புத்தரின் ஞானம் மற்றும் தத்துவ நெறிகளை உள்ளடக்கிய உரைகள் மற்றும் உரையாடல்களின் களஞ்சியமாகும்.
மூன்றாவதாக அபிதம்ம பிடகம். இது நெறிமுறைகள், உளவியல் மற்றும் அறிவுக் கோட்பாடு தொடர்பான பல்வேறு தலைப்புகளை ஆராய்ந்து, மனம் மற்றும் யதார்த்தத்தின் ஆழமான பகுப்பாய்வை வழங்குகிறது.
பாலி இலக்கியத்தில் ஜாதக கதைகள் உண்டு. அவை புத்தரின் முந்தைய வாழ்க்கையில் போதிசத்வர் அல்லது எதிர்கால புத்தர் கதைகளை விவரிக்கும். இந்த விவரிப்புகள் இந்திய மக்களின் பொதுவான பாரம்பரியத்தை எதிரொலிக்கின்றன. பகிரப்பட்ட தார்மீக மதிப்புகள் மற்றும் கலாச்சார மரபுகளைப் பிரதிபலிக்கின்றன. இந்த இலக்கிய பங்களிப்புகள் பண்டைய இந்திய சிந்தனை மற்றும் ஆன்மீகத்தைப் பாதுகாப்பதிலும் கடத்துவதிலும் பாலி ஒரு முக்கிய மொழியாக இருப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதன் மூலம், நீண்ட காலமாக நீடித்திருக்கும் மொழி மறுமலர்ச்சிக்கு தயாராகிறது. இந்த அங்கீகாரம் பாலி மொழியை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் அரசுக்கு உதவும். இந்த முயற்சிகள் மூலம், கல்வி நிறுவனங்களில் பாலி மொழிக் கல்வியை மேம்படுத்தவும், அதன் வளமான இலக்கிய பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
*****
SMB/RR/KR/DL
(Release ID: 2062144)
Visitor Counter : 67