பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தூய்மையே சேவை இயக்கத்தை சிஏஆர்ஏ-வின் புதிய அலுவலகத்தில் தொடங்கிவைத்தார்
Posted On:
04 OCT 2024 3:52PM by PIB Chennai
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, மத்திய தத்தெடுப்பு ஆதார ஆணையத்தின் (சிஏஆர்ஏ) புதிய அலுவலக வளாகத்தை பார்வையிட்டார். நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் தேவைகளுக்கு தொடர்ந்து சேவை செய்வதால், சிஏஆர்ஏ-வின் உள்கட்டமைப்பையும், செயல்திறனையும் மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டினார்.
தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக, சிஏஆர்ஏ அலுவலக வளாகத்தின் ஒரு ஏக்கர் பகுதியை சுத்தம் செய்ய ஒரு அர்ப்பணிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி தூய்மையான, பசுமையான இந்தியாவுக்கான அரசின் நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது. சமூக ஈடுபாட்டையும் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஊக்குவிக்கிறது. இந்த தூய்மை இயக்கத்தின் போது சுமார் ஒரு டன் கழிவுகள் வளாகத்திலிருந்து அகற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சி மரக்கன்றுகள் நடும் இயக்கத்துடன் நிறைவடைந்தது. இதில் 7 வெவ்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு அனில் மாலிக் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-----
PLM/KPG/KR/DL
(Release ID: 2062111)
Visitor Counter : 35