சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அக்டோபர் 7-ந் தேதி இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா

Posted On: 04 OCT 2024 4:05PM by PIB Chennai

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 7, 2024, திங்கட்கிழமை அன்று சென்னை செம்மஞ்சேரி வளாகத்தில் நடக்கவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரும் அமெரிக்காவிற்கான இந்திய தூதுவருமான IFS (ஓய்வு) திரு ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்..

இந்த மதிப்புமிக்க நிகழ்வில், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் ஆறு வளாகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கல்வி நிறுவனங்களின் நான்கு பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 1974 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இவ்விழாவில் நான்கு பேர் முனைவர் பிரிவிலும் ஒருவர் முனைவர் (ஆராய்ச்சி) பிரிவிலும் பட்டங்கள் பெறுகின்றனர்.

சென்னையைத் தலைமையிடமாக கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், உலகத்தரம் வாய்ந்த கடல்சார் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை வழங்குவதற்காக, ஏழு கடல்சார் நிறுவனங்களை ஒன்றிணைத்து 14 நவம்பர் 2008-ம் ஆண்டு மத்திய பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை, பட்டயம், முனைவர் மற்றும் முனைவர் (ஆராய்ச்சி) பட்டங்களை இதன் சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை (2) மற்றும் விசாகப்பட்டினம் வளாகங்கள் மற்றும் இதனுடன் இணைந்த கல்வி நிறுவனங்கள் வாயிலாக வழங்கி வருகிறது.

***

 


(Release ID: 2062006)
Read this release in: English