புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்றம்: வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் நீடித்த வளர்ச்சி

Posted On: 04 OCT 2024 12:36PM by PIB Chennai

முன்னுரை

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, 2023-ம் ஆண்டில் மொத்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 1.02 மில்லியனை எட்டியுள்ளதாக சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் 16.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் இந்தியாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், தூய்மையான எரிசக்தி உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதுடன், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறையில் இந்தியா 2023-ம் ஆண்டு 1.02 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறையில் நீர்மின் திட்டங்கள் 4,53,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது, இது சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக 20% ஆகும்.

சூரியசக்தி  மின் உற்பத்தி பலகைகள் துறையில் இந்தியா சுமார் 3,18,600 பேரை வேலையில் அமர்த்தியுள்ளது. 2023-ல் இந்தியா 9.7 ஜிகாவாட் சூரிய மின்சக்தி தகடுகளை உற்பத்தி செய்து உலக அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் சூரிய சக்தி மின்சாதன (module) உற்பத்தி திறன் 2023-ல் 46 ஜிகாவாட்டாக இருந்த நிலையில், 2024-ல் 58 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மின்தொகுப்புடன் இணைக்கப்பட்ட சூரியசக்தி மின் உற்பத்தி துறையில் 2,38,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதோடு, மின் தொகுப்புடன் இணைக்கப்படாத  திட்டங்களில் சுமார் 80,000 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி திறன் 2023-ல் 44.7 ஜிகாவாட் இருந்தது. இது உலகளவில் இது 4-வது இடமாகும்.

இந்தியாவின் காற்றாலை மின்உற்பத்தி துறை 2023-ல் 52,200 பேருக்கு வேலை அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061902

***

MM/AG/KR




(Release ID: 2061948) Visitor Counter : 41