பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சாணக்யா பாதுகாப்பு உரையாடல் – 2024 அக்டோபர் 24-25 தேதிகளில் இந்திய ராணுவம் நடத்தவுள்ளது

Posted On: 01 OCT 2024 3:21PM by PIB Chennai

 

இந்திய ராணுவம், நில போர் ஆய்வுகள் மையத்துடன் இணைந்து, அதன் முதன்மை நிகழ்வான சாணக்யா பாதுகாப்பு உரையாடல் -2024-ன் இரண்டாவது பதிப்பை "தேசத்தைக் கட்டமைப்பதில் ஓட்டுநர்கள்: விரிவான பாதுகாப்பின் மூலம் வளர்ச்சியைத் தூண்டுதல்" என்ற கருப்பொருளில் நடத்தவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு, 2024 அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடத்தப்படும்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி, நெகிழ்திறன், பாதுகாப்பான மற்றும் வளமான பாரதம் 2047 குறித்த இந்திய ராணுவத்தின் தொலைநோக்கு பார்வை குறித்து விளக்கினார். தேசிய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், தேச நிர்மாணத்தில் இந்திய ராணுவத்தின் பங்களிப்பு குறித்தும் தமது கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

 2047-க்குள் வளர்ந்த பாரதத்திற்கான இந்தியாவின் பாதையை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளில் ராணுவ தளபதி தமது எண்ணங்களை கலந்துரையாடலில் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் நிகர பாதுகாப்பு வழங்குநராக இந்திய ஆயுதப் படைகளின் பங்கு குறித்து விவாதிக்க இந்த கலந்துரையாடல் ஒரு ஈர்க்கக்கூடிய தளத்தை வழங்கியது. பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உகந்த சூழலை வளர்ப்பதற்கு இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு தயார்நிலை முதல் உள்நாட்டு ஸ்திரத்தன்மை வரையிலான வலுவான பாதுகாப்பு கட்டமைப்புகளின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள அரசு, தொழில்துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலியுறுத்தி, பன்முக அணுகுமுறையின் அவசியத்தை இந்த உரையாடல் எடுத்துரைத்தது. தேசிய வளர்ச்சியின் அடித்தளத் தூணாக பாதுகாப்பை வடிவமைப்பதன் மூலம், 2047 ஆம் ஆண்டுக்குள் வளமான மற்றும் பாதுகாப்பான இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டிய இந்த விவாதம், சமூக முன்னேற்றம் மற்றும் நீடித்த வளர்ச்சி என்ற பரந்த இலக்குகளுடன் பாதுகாப்பை சீரமைக்கும் செயலூக்கமான உத்திகளை ஊக்குவிக்கிறது.

இதனைத் தொடர்ந்து ராணுவத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி தலைமையில் குழு விவாதம் நடைபெற்றது. "பாதுகாப்பான தேசம் மற்றும் வளமான எதிர்காலம்: வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் தேசிய பாதுகாப்பை இணைப்பது" என்ற தலைப்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த அமர்வு புதுமைகளை ஊக்குவிக்கும் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான உத்திகளை ஆராய்ந்தது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாட்டை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் பாதுகாப்பை ஒரு அடிப்படைத் தூணாக வடிவமைப்பதன் மூலம், தேசிய வளம் மற்றும் சமூக முன்னேற்றத்துடன் பாதுகாப்பு முயற்சிகளை இணைப்பதன் முக்கியத்துவத்தை இந்த உரையாடல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நிகழ்ச்சி, பாதுகாப்பின் பன்முக பரிமாணங்கள், தேசிய வளர்ச்சியில் அதன் தாக்கம் மற்றும் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இந்தியாவின் பார்வையை அடைவதில் இந்திய ராணுவத்தின் பங்கு ஆகியவற்றை எடுத்துரைத்தது. சாணக்யா பாதுகாப்பு பேச்சுவார்த்தை ஆழமான விவாதங்களுக்கு வழிவகுக்கும், உத்திசார் கூட்டாண்மைகளை வளர்க்கும் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான செயல் நுண்ணறிவுகளை உருவாக்குவதில் பங்களிக்கும். தேசிய மற்றும் சர்வதேச தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் தங்கள் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவும், வளர்ச்சியின் மூலம் பாதுகாப்பு குறித்த சொற்பொழிவில் பங்களிக்கவும் இது ஒரு தளத்தை வழங்கும்.

***

PKV/AG/KV



(Release ID: 2060679) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi