உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
திறமையான நிர்வாகம் மற்றும் தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 4.0-ல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பங்கேற்றது
Posted On:
28 SEP 2024 12:35PM by PIB Chennai
நிலுவையில் உள்ள விஷயங்களை விரைவாகக் கண்காணித்து, அதன் அலுவலகங்களில் தூய்மையை பராமரிக்கும் நோக்கத்துடன் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சிறப்பு இயக்கம் 4.0-ல் (2 அக்டோபர் - 31 அக்டோபர் 2024) இணைந்துள்ளது. இந்த முயற்சி ஆளுகையையும் நிர்வாக செயல்திறனையும் மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.
விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு 2024, செப்டம்பர் 27 அன்று ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதன் மூலம் இந்த இயக்கத்திற்குத் தெளிவான இலக்குகளை அமைத்தார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக தூய்மையையும், நிர்வாக செயல்திறனையும் மேம்படுத்த அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
இயக்கத்தின் ஆயத்த கட்டத்தில், 16,580 நேரடிக் கோப்புகள், 2,093 மின்னணு கோப்புகள் உட்பட பல பிரிவுகளின் கீழ் நிலுவையில் உள்ள பணிகளை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. பொதுமக்களின் 283 குறை தீர்க்கும் மனுக்கள், 100 மேல்முறையீட்டு மனுக்கள் முகாமின் போது தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்கத்தின் போது 678 இடங்கள் தூய்மை நடவடிக்கைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டன
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், பிற அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். முந்தைய முயற்சிகளின் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு, இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் முக்கிய நடவடிக்கைகளில் அமைச்சகம் கவனம் செலுத்துகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், நிர்வாகத் திறனை அதிகரிப்பதற்கும், சிறப்பு இயக்கம் 4.0-ஐ திறம்பட செயல்படுத்துவதன் மூலம் தூய்மையை ஊக்குவிக்க அர்ப்பணிப்புடன் உள்ளது.
*****
SMB/KV
(Release ID: 2059838)
Visitor Counter : 55