சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மோடி 3.0-ன் 100 நாட்கள்: வலுமிக்க எதிர்காலத்திற்கு சுகாதாரம், கல்வித்துறைகளில் லட்சிய சீர்திருத்தங்கள் 

Posted On: 28 SEP 2024 11:54AM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்க 100 நாட்களில், நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான அற்புதமான முயற்சிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த லட்சியத் திட்டங்கள் சுகாதார அணுகல், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத்  திட்டத்தின்பலன்களை மூத்தக் குடிமக்களுக்கு விரிவுபடுத்துவதிலிருந்து, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தடுப்பூசி சேவைகளுக்கான யூவின் போர்டல் போன்ற புதுமையான தளங்களைத் தொடங்குவது வரை, ஆரோக்கியமான மற்றும் சிறந்த கல்வியறிவு பெற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. கூடுதலாக, தேசிய மருத்துவ பதிவு போர்ட்டலை நிறுவுதல், 75,000 புதிய மருத்துவ இடங்களை உருவாக்குதல், புற்றுநோய் சிகிச்சை மற்றும் உயிரித்தொழில்நுட்பத்தில் கொள்கை சீர்திருத்தங்கள் போன்ற முயற்சிகள்  தன்னம்பிக்கையையும் நெகிழ்திறனையும்  கொண்ட தேசத்தை உருவாக்குவதற்கான நீண்டகால பார்வையைப் பிரதிபலிக்கின்றன.

ஆயுஷ்மான் பாரத்

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் என்ற முதன்மைத் திட்டத்தின் கீழ் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்க மத்திய அமைச்சரவை செப்டம்பர் 11, 2024 அன்று ஒப்புதல் அளித்தது. ஆறு கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட சுமார் 4.5 கோடி குடும்பங்கள் 5 லட்சம் ரூபாய் இலவச மருத்துவக் காப்பீட்டுடன் பயனடைவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

யூவின் போர்டல்

தடுப்பூசி சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்காக உருவாக்கப்பட்ட யூவின் போர்ட்டல், உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறப்பு முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு  தடுப்பூசி பதிவுகளை பராமரிக்கிறது. 2024, செப்டம்பர் 16  நிலவரப்படி, 6.46 கோடி பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். 1.04 கோடி தடுப்பூசி அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 23.06 கோடி நிர்வகிக்கப்பட்ட தடுப்பூசி அளவுகள் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு

நாட்டில் உள்ள 27 லட்சம் புற்றுநோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில், மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான் (மார்பக புற்றுநோய்), ஒசிமெர்டினிப் (நுரையீரல் புற்றுநோய்), துர்வாலுமாப் (நுரையீரல் புற்றுநோய்) ஆகிய மூன்று புற்றுநோய் மருந்துகள் வெவ்வேறு கட்டி வகைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் செலவினமும் சுமார் ரூ.4000 கோடி அதிகரிக்கப்பட்டு ரூ.31,550 கோடியிலிருந்து ரூ.36,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலை பொது சுகாதார வசதிகளில் முதலீடு செய்து, சுகாதாரத்தின் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் அம்சங்களை செயல்படுத்தி, பொதுமக்கள் தங்கள் கையிலிருந்து செலவழிப்பதை குறைப்பதே அரசின் நோக்கமாகும்.

இந்தியாவின் சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ இடங்களை உருவாக்குவதாக அரசு அறிவித்தது. இது நாட்டின் மருத்துவக் கல்வித் திறனை மேம்படுத்துவதையும், சுகாதார நிபுணர்களுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் திறப்பு

பீகார் மாநிலம் ராஜ்கீரில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி 2024, ஜூன் 19 அன்று திறந்து வைத்தார். இந்தப் பல்கலைக்கழகம் இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு  நாடுகளின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு கல்வித் தொகுப்புகள் உள்ளன. மொத்தம் 1900 இருக்கைகள் கொண்ட 40 வகுப்பறைகள்  உள்ளன. இப்பல்கலைக்கழகம் தலா 300 இருக்கைகள் கொண்ட இரண்டு கலையரங்கங்களைக் கொண்டுள்ளது.

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிதியம்

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை  சட்டம் 2023 உடன் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட்டது. இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை  தொடங்குதல், வளர்த்தல் மற்றும் ஊக்குவித்தல், இந்தியாவின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் முழுவதும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு 2023-2028 காலகட்டத்தில் ரூ.50,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 விஞ்ஞான் தாரா திட்டம்

 2021-22 முதல் 2025-26 வரையிலான பதினைந்தாவது நிதிக்குழு காலத்தில் 'விஞ்ஞான் தாரா' என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள தொகை ரூ. 10,579.84 கோடியாகும். திட்டங்களை ஒரே திட்டமாக இணைப்பது நிதி பயன்பாட்டில் செயல்திறனை மேம்படுத்தும். துணை திட்டங்களுக்கும்  / திட்டங்களுக்கும்  இடையே ஒத்திசைவை ஏற்படுத்தும். இத்திட்டத்தை அமல்படுத்தி   கல்வி நிறுவனங்களில் நன்கு பொருத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களை வளர்ப்பதன் மூலம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்த முடியும்.

பயோஇ3 கொள்கை

பயோஇ3 (பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பம்) என்ற  முன்முயற்சி உயிரி உற்பத்தி, உயிரி செயற்கை நுண்ணறிவு மையங்கள் மற்றும் பயோஃபவுண்டரிகளை நிறுவுவதன் மூலம் தொழில்நுட்ப மேம்பாட்டையும் வணிகமயமாக்கலையும்  துரிதப்படுத்துகிறது. பயோஇ3 கொள்கை மிகவும் நிலையான, புதுமையான, உலகளாவிய சவால்களுக்கு பதிலளிக்கக்கூடிய எதிர்காலத்தை வளர்த்து முன்னேற்றுகிறது; வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உயிரி தொலைநோக்கை வகுக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2059772

*****

SMB/KV

 

 



(Release ID: 2059816) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi , Marathi