வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-மியான்மர் கூட்டு வர்த்தகக் குழுவின் 8-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 27 SEP 2024 7:02PM by PIB Chennai

இந்தியா - மியான்மர் கூட்டு வர்த்தகக் குழுவின் 8-வது கூட்டம் புதுதில்லியில் உள்ள வானிஜ்யா பவனில் இன்று (27.09.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு இந்தியாவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறையின் இணைச் செயலாளர் திரு. சித்தார்த் மகாஜனும் மியான்மர் வர்த்தகத் துறையின் தலைமை இயக்குநர் திரு மியின்ட் துராவும் கூட்டாகத் தலைமை வகித்தனர். சம்பந்தப்பட்ட பிற அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பரஸ்பர வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்புக்கான பல்வேறு செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கப்பல் போக்குவரத்து, ஜவுளி, சுகாதாரம், இந்திய மருந்துத் துறை, மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், 5ஜி தொலைத்தொடர்பு சேவை, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை  போன்றவற்றில்  ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர்.

ஆசியான் அமைப்பில் இந்தியாவின் 7-வது பெரிய வர்த்தக பங்குதாரராக மியான்மர் உள்ளது. 2023-24-ம் ஆண்டில் மொத்த இருதரப்பு வர்த்தகம் 1.75 அமெரிக்க டாலர் பில்லியனாக இருந்தது.

***

PLM/KPG/DL


(Release ID: 2059654) Visitor Counter : 28


Read this release in: English , Urdu , Hindi