பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில்நுட்பம் சார்ந்த போர் முறைகளில் விரைவாக முடிவெடுப்பதை மேம்படுத்த வேண்டும்: முப்படைகளின் தளபதி திரு அனில் சவுகான்

Posted On: 27 SEP 2024 6:08PM by PIB Chennai

இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த போர்க்களத்தில் விரைவான முறையில் முடிவெடுப்பதை மேம்படுத்த எதிர்கால உத்திசார் தலைமைத்துவத்தின் அவசியத்தை முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான் வலியுறுத்தியுள்ளார் .

இன்று (27.09.2024) முடிவடைந்த முப்படைகளின் போர் செயல்பாடுகள் தொடர்பான பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய திரு அனில் சௌகான், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ரோபாட்டிக்ஸ் போன்றவற்றின் முன்னேற்றங்கள் எதிர்கால போர்களின் தன்மையைத் தீர்மானிக்கும் என்றார்.

முக்கிய தொழில்நுட்பங்களின் பெருக்கம், மாறிவரும் போரின் தன்மை, தற்போதைய போர்களிலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகள் ஆகியவற்றுடன் இணைந்த ஒரு ஆற்றல்மிக்க பாதுகாப்பு சூழல் அவசியம் என்று அவர் கூறினார்.

இந்த ஒரு வார காலப் பயிற்சித் திட்டத்தில் போர்கள் தொடர்பான முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டது. எதிர்கால போக்குகள், வான் - விண்வெளிப் போர், கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் பல கள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

----

PLM/KPG/DL


(Release ID: 2059619)
Read this release in: English , Urdu , Hindi