விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை-இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தூய்மையே சேவை மற்றும் சிறப்பு பிரச்சாரம் 4.0க்கான விரிவான ஏற்பாடு
Posted On:
27 SEP 2024 4:57PM by PIB Chennai
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை-இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் இணைந்து தூய்மையே சேவை மற்றும் சிறப்பு பிரச்சாரம் 4.0 க்காக விரிவான தூய்மைப் பணிகளுக்கு ஏற்பாடு செய்தன. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை-இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் தலைமையகத்தின் அனைத்து மூலைகள், கட்டிடங்களின் வெளிப்புறம் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உட்பட முழுமையாக சுத்தம் செய்யப்பட்டன. முழு வளாகத்தையும் குப்பைகள் இல்லாததாக மாற்ற விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முறையான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் மூலம் தாழ்வாரங்களில் அழகுபடுத்தல்கள் செய்யப்பட்டன. 'தூய்மையே சேவை' தொடர்பான அறிவிப்பு பலகைகள் கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டன.
அனைத்து தளங்கள், மின்தூக்கிகள், தாழ்வாரங்கள், கழிவறைகள், வெளிப்புற புல்வெளிகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வளாகத்திற்குள் உள்ள சாலைகள் என ஒவ்வொரு பகுதியும் விரிவாக சுத்தம் செய்யப்பட்டன. நீர்க்கசிவு பிரச்சனைகளை சரிசெய்வதற்கான செயல்முறைகளைத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏராளமான கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு களையெடுக்கப்பட்டுள்ளன. கழிவுகளை அகற்றுவது கண்காணிக்கப்படுகிறது. இதன் விளைவாக பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்த போதுமான அளவு இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. பயன்படாத பொருட்கள் அப்புறப்படுத்துவதன் மூலம் அலுவலகத்திற்கு வருவாய் ஈட்டப்படும். அனைத்து அலுவலர்களும் தங்கள் பணியிடத்தை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
***
PKV/RR/DL
(Release ID: 2059557)
Visitor Counter : 37