நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, தூய்மையே சேவை - 2024 இயக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது

Posted On: 25 SEP 2024 6:29PM by PIB Chennai

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று (Plant4Mother) பிரச்சாரத்தை இன்று தனது அலுவலகத்தில் கொண்டாடியது. புதுதில்லி உப்போக்தா நியாய் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் உறுப்பினர் நீதிபதி திரு.ஆர்.எஸ்.மௌரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீதிபதி திரு ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி திரு ஆர்.எஸ்.மௌரியா ஆகியோர் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ்  மரக்கன்றை நட்டனர். அலுவலக இடத்தை சுத்தம் செய்யும் உணர்வு தொடர்கிறது. DoCA BIS, கொல்கத்தா கிளை அலுவலகம் -I மற்றும் ஆர்ஆர்எஸ்எல், பெங்களூரு மற்றும் ஆர்ஆர்எஸ்எல், ஃபரிதாபாத் ஆகியவற்றின் தன்னாட்சி மற்றும் துணை அமைப்புகள் அலுவலக அலமாரிகள், கோப்புகள், மேசைகள் மற்றும் நாற்காலிகள் போன்ற அலுவலக பணியிடங்களை சுத்தம் செய்தன.

பிஐஎஸ், கொல்கத்தா மற்றும் ஆர்ஆர்எஸ்எல், பெங்களூரு ஊழியர்கள் தங்கள் அலுவலக பணியிடத்தை சுத்தம் செய்கிறார்கள்.

ஆர்.ஆர்.எஸ்.எல் நாக்பூரில் உள்ள அம்பஜாரி ஏரியில் வெகுஜன அளவிலான தூய்மை இயக்கத்தை நடத்தியது. அங்கு அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும் ஏரியையும் அதன் அருகிலுள்ள பகுதியையும் சுத்தம் செய்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செயதிக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058730
                                     ***

MM/KPG/DL 

 
 
 

(Release ID: 2058785) Visitor Counter : 44


Read this release in: English , Hindi