வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

உலக உணவு இந்தியா 2024-ல் இந்தியாவின் மாறுபட்ட வேளாண்-உணவு வகைகளை APEDA காட்சிப்படுத்தியுள்ளது

Posted On: 20 SEP 2024 12:35PM by PIB Chennai

புதுதில்லி பாரத மண்டபத்தில் உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள உலக உணவு இந்தியா 2024-ல்  வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தனது அரங்கை அமைத்துள்ளது. அபீடா தலைவர் திரு. அபிஷேக் தேவ், அபீடாவின் மூத்த அதிகாரிகள், பல்வேறு இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் முன்னிலையில், வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளர் திரு. ராஜேஷ் அகர்வால் இந்த அரங்கைத் திறந்து வைத்தார்.

 

செப்டம்பர் 19 முதல் 22, 2024 வரை திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வில் புதிய பொருட்கள், பதனப்படுத்தப்பட்ட உணவுகள், கரிம பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளை காட்சிப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளை அபீடா வழிநடத்துகிறது.

 

இந்திய தோட்டக்கலை விளைபொருட்களை மத்திய கிழக்கு சந்தைகள் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கு மேம்படுத்துவதற்காக லுலு குரூப் இன்டர்நேஷனல் தலைவர் திரு யூசுப்அலியுடன் திரு அபிஷேக் தேவ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டார்.

 

இந்த உத்திகள் கூட்டாண்மை உலகெங்கிலும் பரவியுள்ள லுலு குழுமத்தின் ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களின் விரிவான நெட்வொர்க் மூலம் சர்வதேச சந்தைகளில் இந்திய தோட்டக்கலை உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக அளவில் இந்திய தோட்டக்கலை ஏற்றுமதியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

பாரத மண்டபத்தில் உள்ள கண்காட்சி அரங்கில் (அரங்கம் எண் 3) உள்ள APEDA அரங்கில் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 155 கண்காட்சிகள் இந்த மூன்று நாள் விழாவில் பங்கேற்கின்றன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் முக்கிய பங்கேற்பாளர்கள் அடங்குவர். புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், பதனப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், பாஸ்மதி அரிசி, விலங்கு பொருட்கள், முந்திரி பருப்புகள், புவிசார் குறியீடு (ஜிஐ) தயாரிப்புகள், கரிம பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும் முக்கிய துறைகளில் அடங்கும்.

 

APEDA சுமார் 80+ நாடுகளில் இருந்து முக்கிய சர்வதேச வாங்குபவர்களை அழைத்துள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வாங்குபவர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதிநிதிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ள ஒரு தளத்தை வழங்குகிறது. இறக்குமதியாளர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் வேளாண் தொழில் முனைவோர் இடையே இன்று மட்டும் சுமார் 1000 வர்த்தகர்களுக்கு இடையிலான கூட்டங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு நடத்தப்பட உள்ளன.

 

புதிய மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பாஸ்மதி அரிசி, சிறுதானியம் சார்ந்த பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள் மற்றும் புவிசார் குறியீடு கொண்ட பொருட்கள் ஆகியவை அரங்கில் முக்கியமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. HMA Agro, Millet Magic Foundation, Jasmer Foods, Bassilia Organics, House of Himalayas, All India Cashew Association, Indian Institute of Packaging, Vattam Agro & Dairy Industries Pvt. Ltd., Magnum Foods & Snacks Pvt. Ltd., மற்றும் Kamdhenu Enterprises போன்ற வணிக முத்திரை நிறுவனங்கள் தனித்துவமான தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன.

 

உலக சந்தைகளில் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள, இந்தியாவின் மதிப்புமிக்க புவிசார் குறியீடு கொண்ட தயாரிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புவிசார் குறியீடு கொண்ட தயாரிப்புகளுக்கான சிறப்பு காட்சியகம், புவிசார் குறியீடு தயாரிப்பு கேலரி ஆகியவை APEDA அரங்கின் ஒரு பகுதியாகும்.

 

பங்கேற்பாளர்கள் நேரடி சமையல் செயல்விளக்கங்களையும் காணலாம். மேலும் காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகளிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு சுவையான இந்திய உணவுகளை சுவைக்கலாம்.

 

 

உலக உணவு இந்தியா 2024 இல் APEDA-வின் பங்கேற்பு இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பது, புதிய சந்தைகளைத் திறப்பது மற்றும் உலகளவில் பல்வேறு மற்றும் உயர்தர விவசாய உணவுப் பொருட்களின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இந்தியாவின் நற்பெயரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

(Release ID: 2056913)
PKV/RR/KR



(Release ID: 2056980) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi