ஜவுளித்துறை அமைச்சகம்
“100 நாள் திட்டங்களில் கைத்தறி மேம்பாட்டுத்துறை ஆணையர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்
Posted On:
19 SEP 2024 6:41PM by PIB Chennai
ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள கைத்தறி மேம்பாட்டுத்துறை ஆணையர் அலுவலகம் அதன் "100 நாள் திட்டத்தின்" கீழ், 10வது தேசிய கைத்தறி தின கொண்டாட்டம், 100 தொகுப்புகளில் திறனை மேம்படுத்துதல் மற்றும் ஷரன் (இமாச்சல பிரதேசம்) மற்றும் கனிஹாமா (ஜம்மு &காஷ்மீர்) ஆகிய இடங்களில் கைவினை கைத்தறி கிராமங்களை நிறைவு செய்தல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டது.
10-வது "தேசிய கைத்தறி தினம்" 2024, ஆகஸ்ட் 7 அன்று புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தங்கர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது, 2023-ம் ஆண்டிற்கான 5 துறவி கபீர் கைத்தறி விருதுகள் மற்றும் 17 தேசிய கைத்தறி விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, கைத்தறித் துறை குறித்த ஆடை அலங்கார அணிவகுப்பை தேசிய ஆடை வடிவமைப்புக்கழகம் நடத்தியது. விருது பெற்றவர்களின் விவரங்கள் அடங்கிய விருதுப் பட்டியலை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கைத்தறித் துறை துணை ஆணையர் (கைத்தறி) திட்டங்களின் கீழ் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட 5 நெசவாளர் சேவை மையங்கள் பாராட்டப்பட்டன.
வாரணாசியில் சிறப்பு கைத்தறி கண்காட்சி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற்றது. புதுதில்லி ஜன்பத்தில் உள்ள கைத்தறி கண்காட்சியில் ஒரு பிரத்யேக கைத்தறி கண்காட்சி", கைவினை அருங்காட்சியகத்தில் "உங்கள் நெசவை அறிந்து கொள்ளுங்கள்" இயக்கம் மற்றும் தில்லி கண்காட்சி எனது கைத்தறி எனது பெருமை கண்காட்சி 2024" போன்ற பிற நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. மை கவ் இணையதளத்தில் கைத்தறி குறித்த வினாடி வினா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2056760
***
IR/RS/KR
(Release ID: 2056904)
Visitor Counter : 39