ஜல்சக்தி அமைச்சகம்
8-வது இந்திய தண்ணீர் வாரம் 2024-ன் 2-வது நாள்-பங்கேற்பாளர்களிடையே உற்சாகத்தை காணமுடிந்தது
Posted On:
18 SEP 2024 7:08PM by PIB Chennai
8-வது இந்திய தண்ணீர் வாரம் 2024-ன் 2-வது நாளும் பங்கேற்பாளர்களிடையே பெரும் உற்சாகத்தை காணமுடிந்தது.
பல்வேறு நாடுகள் பங்கேற்ற மூன்று அமர்வுகள் இன்று நடைபெற்றன. டென்மார்க், சிங்கப்பூர், கயானா, ஜிம்பாப்வே, இந்தோனேசியா, மொராக்கோ, கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் நீர்வளத் துறையில் அவர்களின் சிறந்த நடைமுறைகளை எடுத்துரைத்தனர். இந்த அமர்வுகள் நீர்வளத் துறையில் அரசுகள் மற்றும் வணிகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான வாய்ப்புகளை எடுத்துரைத்தன.
நீர்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் ராஜ் பூஷண் சவுத்ரி முன்னிலையில் 6-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய நீர்வள அமைப்பின் கூட்டு உயர்மட்ட முழுமையான அமர்வு நடைபெற்றது. நீர் துறையில் தொடர்புடைய பகுதிகளை ஆராய்வதும், அரசுப் பிரதிநிதிகள், வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் பங்களிப்பு செய்து பயனடையக்கூடிய இந்திய-ஐரோப்பிய ஒன்றிய நீர் கூட்டாண்மையின் முன்னேற்றங்கள் குறித்து விளக்குவதும் இந்த அமைப்பின் நோக்கமாகும். இதேபோல், நீர் மேலாண்மையில் புதுமையான தீர்வுகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தனித்தனி அமர்வுகள் நடத்தப்பட்டன.
நிலத்தடி நீர் சேமிப்பு மேலாண்மை, நீர் பயன்பாட்டுத் திறன் போன்றவற்றிலிருந்து விளக்கக்காட்சிகள் மற்றும் விவாதங்கள் இன்றைய இரண்டாவது நாளின் மற்றொரு முக்கிய பகுதியாக இருந்தது.
----
IR/KPG/DL
(Release ID: 2056345)
Visitor Counter : 38