இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் 2024, செப்டம்பர் 17-18 தேதிகளில் சிஓபி9 அமைப்பு மற்றும் யுனெஸ்கோ ஊக்கமருந்து தடுப்பு மாநாட்டின் நிதி ஒப்புதல் குழுவின் முறையான கூட்டங்களை இந்தியா நடத்தவுள்ளது

Posted On: 16 SEP 2024 2:19PM by PIB Chennai

சிஓபி9 அமைப்பின் 2-வது முறையான கூட்டம் மற்றும் விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டின் கீழ் நிதி ஒப்புதல் குழுவின் 3-வது முறையான கூட்டம் 2024, செப்டம்பர் 17-18 அன்று புதுதில்லியில் இந்தியா நடத்த உள்ளது. சிஓபி9 அமைப்பின் துணைத் தலைமைத்துவமாக, இந்த உயர்மட்டக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது, இது உலகெங்கிலும் உள்ள முக்கிய முடிவெடுப்பவர்கள் மற்றும் பிரமுகர்களை ஒன்றிணைக்கும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படும் இந்த கூட்டங்களில், அஜர்பைஜான், பார்படோஸ், எஸ்டோனியா, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, சவுதி அரேபியா, செனகல், சிங்கப்பூர், நெதர்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு காணலி வாயிலான விவாதங்களில் பங்கேற்பார்கள்.

குறிப்பாக, அஜர்பைஜான் குடியரசின் மாண்புமிகு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு ஃபரித் கெய்போவ், துருக்கியைச் சேர்ந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துணை அமைச்சர் திருமதி சஃபா கோகோக்லு மற்றும் சவூதி அரேபியாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை துணை அமைச்சர் திரு அப்துல் அஜீஸ் அல்மசாத் உட்பட பல உயர்நிலை பிரமுகர்கள் நேரடியாக கலந்து கொள்வார்கள்.

ஊக்கமருந்து பயன்பாடு எதிர்ப்பு, நியாயமான விளையாட்டு நடைமுறைகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டில் ஒருமைப்பாட்டின் கொள்கைகளை நிலைநிறுத்துவதில், உலகளாவிய ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு இந்த கூட்டங்கள் ஒரு முக்கிய தளமாக செயல்படும். இந்த விவாதங்கள் ஊக்கமருந்துக்கு எதிரான தற்போதைய போராட்டத்தை வலுப்படுத்துவதில் கருவியாக இருக்கும், உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் நேர்மையான மற்றும் நியாயமான சூழலில் போட்டியிட முடியும் என்பதை உறுதி செய்யும்.

******

(Release ID: 2055334)

IR/KPG/KR


(Release ID: 2055356) Visitor Counter : 53


Read this release in: Malayalam , English , Urdu , Hindi