தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஒன்றுக்கும் மேற்பட்ட என்.எஸ்.ஓக்களிடமிருந்து சேவை வி.என்.ஓக்களை அணுகுவதற்கான இணைப்பு குறித்த பரிந்துரைகளை டிராய் வெளியிட்டது
Posted On:
13 SEP 2024 9:32PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஒன்றுக்கும் மேற்பட்ட என்.எஸ்.ஓக்களிடமிருந்து சேவை வி.என்.ஓக்களை அணுகுவதற்கான இணைப்பு குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
தொலைத் தொடர்புத் துறை, 07.07.2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம் - 'ஒன்றுக்கும் மேற்பட்ட என்.எஸ்.ஓக்களிடமிருந்து சேவை வி.என்.ஓக்களை அணுகுவதற்கான இணைப்பு' என்ற தலைப்பில், டிராய் சட்டம், 1997 இன் பிரிவு 11 (1) (ஏ) இன் கீழ் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளைக் கோரியது.
இது தொடர்பாக, பங்குதாரர்களின் கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளைக் கோருவதற்காக 23.02.2024 அன்று இது குறித்த ஆலோசனை அறிக்கை தயாரிக்கும் பணியை டிராய் தொடங்கியது. ஒன்பது பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டன மற்றும் நான்கு பங்குதாரர்களிடமிருந்து எதிர் கருத்துக்கள் பெறப்பட்டன. ஆலோசனை அறிக்கை மீதான விவாதம் 08.05.2024 அன்று நடைபெற்றது.
பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் அதன் சொந்த பகுப்பாய்வின் அடிப்படையில், டிராய் ஒன்றுக்கும் மேற்பட்ட என்.எஸ்.ஓக்களிடமிருந்து சேவை வி.என்.ஓக்களை அணுகுவதற்கான இணைப்பு குறித்த பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது.
2016 ஆம் ஆண்டில், தொலைத்தொடர்புத் துறை இந்தியாவில் மெய்நிகர் இணைப்பு வழங்குனர்கள் (வி.என்.ஓ) முறையை அறிமுகப்படுத்தியது. வி.என்.ஓ-க்கள் இணைப்பு சேவை வழங்குனர்களின் (என்.எஸ்.ஓ) நீட்டிப்பாகக் கருதப்படுகின்றன. வி.என்.ஓக்கள் தங்கள் பரஸ்பர ஒப்பந்தத்தின்படி என்.எஸ்.ஓக்களிடமிருந்து தொலைத்தொடர்பு இணைப்பு வளங்களைப் பெற்ற பிறகு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க முடியும்.
இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது நாட்டில் கம்பி இணைப்பு அணுகல் சேவைகளின் சேவையின் தரத்தை உயர்த்தும் என்று ஆணையம் கருதுகிறது. பல்வேறு என்.எஸ்.ஓக்களிடமிருந்து கம்பியில்லா அணுகல் சேவை மற்றும் கம்பி இணைப்பு அணுகல் சேவைக்கான இணைப்பைப் பெறுவதற்கு சேவை வி.என்.ஓ.க்களை அணுகுவதற்கான நெகிழ்வுத்தன்மையையும் இது வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054807
***************
BR/KV
(Release ID: 2054893)
Visitor Counter : 35