மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில், பருவமழை மாநாடு 2024 - மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரின் தேசிய மாநாடு
Posted On:
13 SEP 2024 8:58PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் தலைமையில் "பருவமழை மாநாடு 2024- மாநில கால்நடை பராமரிப்பு அமைச்சர்களின் தேசிய மாநாடு, செப்டம்பர் 13, 2024 அன்று ஒடிசா மாநில தலைநகரம் புவனேஸ்வரில் உள்ள லோகா சேவா பவனில் நடைபெற்றது. ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், திரு. ஜார்ஜ் குரியன் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் 17 மாநிலங்களைச் சேர்ந்த கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். அடிமட்ட அளவில் திறம்பட திட்டங்களை அமல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு கட்டமைப்பை உருவாக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எதிர்பார்ப்புகளை ஈர்க்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள், இயக்குநர்கள், பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கால்நடைமற்றும் பால்வளத் துறையில் முதல் 100 நாட்களுக்கான செயல் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது "ஓம்ஃபெட் கோல்ட் பிளஸ்" என்ற புதிய வகை பாலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தனது உரையின் போது, கால்நடை பராமரிப்புத் துறை தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அவற்றை அணுகுமாறு அனைத்து மாநில அமைச்சர்களையும் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054791
************************
BR/KV
(Release ID: 2054892)
Visitor Counter : 37