அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

எம்ஓஎஃப்-அடிப்படையிலான சூப்பர் மின்தேக்கிகளில் குறைபாடுகளைக் குறைக்கும் புதிய முறையால் ஆற்றல் சேமிப்பை மேம்படுத்தலாம்

Posted On: 12 SEP 2024 5:45PM by PIB Chennai

லேசர் கதிர்வீச்சு மூலம் எம்ஓஃஎப்-அடிப்படையிலான சூப்பர் மின்தேக்கிகளில் கட்டுப்படுத்தப்பட்ட குறைபாடுகளை அறிமுகப்படுத்தும் ஒரு புதிய முறை, தற்போதுள்ள ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும்.

கடந்த சில ஆண்டுகளில், வெப்ப அனீலிங், ரசாயன வெளிப்பாடு, உயர் ஆற்றல் பந்து அரைத்தல், மின்-கற்றை, ரசாயன நீராவி படிதல் போன்றவற்றை உருவாக்க பல முறைகள் ஆராயப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த முறைகளைப் பயன்படுத்தி பொருட்களில் குறைபாடுகளின் அளவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பாரம்பரிய முறைகள் குறைபாடுகளை நன்றாகச் சரிசெய்வதற்குத் தேவையான துல்லியத்தைக் கொண்டிருக்கவில்லை.

பழமையான எம்ஓஎஃப் (உலோக கரிம கட்டமைப்பு) செயல்பாட்டை மற்ற பொருட்களாக மாற்றாமல் அல்லது அதிலிருந்து ஒரு கலவையை உருவாக்காமல், அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல்-தொழில்நுட்ப நிறுவனத்தின் (INST) விஞ்ஞானிகள் குறைபாடுகளையும் போரோசிட்டியையும் முறையாக கட்டுப்படுத்த லேசர் சக்தியை கவனமாக சரிசெய்தனர். இதன் விளைவாக மின்முனையின் மேற்பரப்பு, செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது.

லேசர் சக்திகளை துல்லியமாக சரிசெய்வதன் மூலம், பேராசிரியர் விவேக் பாக்சி,  அவரது குழுவினர் குறைபாடுகள், போரோசிட்டியை அதன் படிக கட்டமைப்பை மாற்றாமல் கட்டுப்படுத்தினர்.

இந்த நுட்பத்தின் புதுமை என்னவென்றால் எம்ஓஎஃப் பொருளின் படிகத்தன்மை பெரும்பாலும் பாதுகாக்கப்படுகிறது. லேசர் கதிர்வீச்சு பொருளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

லேசர் செயல்முறைகள் பாரம்பரிய முறைகளை விட விரைவானவை, நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. தொகுப்பின் ஒவ்வொரு படியையும் துல்லியமாக கட்டுப்படுத்த முடியும். மேலும் இது பாதுகாப்பான, சுத்தமான, சுற்றுச்சூழல் நட்பு அணுகுமுறையாகும். பொதுவாக ரசாயன கரைப்பான்கள் அல்லது கூடுதல் பொருட்கள் தேவையில்லை.

எசிஎஸ் மெட்டீரியல்ஸ் லெட்டர் இதழில் வெளியிடப்பட்ட இந்த நுட்பம் மேலும் ஆராய்ச்சிக்கான வாய்ப்பை வழங்குகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பங்களின் செயல்பாட்டை மேம்படுத்த இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

வெளியீட்டு இணைப்பு: https://doi.org/10.1021/acsmaterialslett.4c00206.

***

(Release ID: 2054229)

PLM/RS/KR

 



(Release ID: 2054429) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi