புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 2024 ஜூலை மாதத்தில் 4.8% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
Posted On:
12 SEP 2024 5:30PM by PIB Chennai
தொழில்துறை உற்பத்திக் குறியீட்டெண்ணின் விரைவு மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதமும் 12ஆம்தேதி (அல்லது 12ஆம் தேதிவிடுமுறை நாளாக இருந்தால் முந்தைய வேலை நாளில்) ஆறு வார கால தாமதத்துடன் வெளியிடப்படுகின்றன. மேலும் மூல முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் தொகுக்கப்படுகின்றன. அவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் / நிறுவனங்களிடமிருந்து தரவைப் பெறுகின்றன. தொழில் உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படி, இந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும்.
2024, ஜூலை மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவான மதிப்பீடுகளுடன், 2024, ஜூன் மாதத்திற்கான குறியீடுகள் முதல் திருத்தத்திற்கு உட்பட்டுள்ளன மற்றும் 2024 ஏப்ரல் மாதத்திற்கான குறியீடுகள் மூல முகமைகளிடமிருந்து பெறப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தரவுகள் இறுதி திருத்தத்திற்கு உட்பட்டுள்ளன. 2024. ஜூலை மாதத்திற்கான விரைவு மதிப்பீடுகள், 2024, ஜூன் மாதத்திற்கான முதல் திருத்தம் மற்றும் 2024 ஏப்ரல் மாதத்திற்கான இறுதி திருத்தம் ஆகியவை முறையே 91 சதவீதம், 94 சதவீதம் மற்றும் 96 சதவீதம் என்ற விகிதங்களில் தொகுக்கப்பட்டுள்ளன.
2024 ஆகஸ்ட் மாதத்திற்கான குறியீடு 2024 அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும்.
ஜூலை 2024 மாதத்திற்கான தொழில்துறை குறியீட்டு வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாகும். இது 2024 ஜூன் மாதத்தில் 4.7% ஆக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054214
---
PKV/KPG/DL
(Release ID: 2054265)
Visitor Counter : 40