மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக் லிக்கி தலைமையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் பிரதமரின் மீன்வள மேம்பாடு திட்டங்கள் மற்றும் பிற மீன்வளம் தொடர்பான திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
Posted On:
12 SEP 2024 4:32PM by PIB Chennai
பிரதமரின் மீன்வள மேம்பட்டுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மீன்வளத்துறை 4-வது ஆண்டு கொண்டாட்டத்தை நேற்று புதுதில்லியில் ஏற்பாடு செய்தது. தொடக்க அமர்வைத் தொடர்ந்து, பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் மீன்வளத் துறை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. பல்வேறு மீன்வள முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுதல், பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம் மற்றும் பிற திட்டங்களின் கீழ் எதிர்கால வளர்ச்சிக்கான சவால்கள் மற்றும் பகுதிகளை அடையாளம் காணுதல் ஆகியவற்றை இக்கூட்டம் நோக்கமாகக் கொண்டது.
இக்கூட்டத்திற்கு மத்திய அரசின் மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக் லிக்கி தலைமை தாங்கி, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் பற்றிய விளக்கத்தை வழங்கினார். உள்நாட்டு மீன்வளத்துறை இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா, மாநில மீன்வளத் துறைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள், மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும நிறுவனங்களின் மூத்த அதிகாரி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய திரு சாகர் மெஹ்ரா, நிலையான நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகள் மூலம், மீன்வளத் துறையை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் சிறந்த நடைமுறைகள் மற்றும் வெற்றிகள் குறித்த காட்சிப்படுத்தப்பட்டன. ஜிரோ மாவட்டத்தில் உள்ள தாரினில், ஒருங்கிணைந்த நீர்வாழ் பூங்கா மேம்பாடு குறித்து, அருணாச்சல பிரதேச மீன்வளத்துறை செயலாளர் விளக்கினார். அதே நேரத்தில் ஆந்திர பிரதேச மீன்வளத்துறை ஆணையர் திரு டோலா சங்கர், உள்நாட்டு மீன் நுகர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட "மீன் ஆந்திரா" முன்முயற்சி குறித்த நுண்ணறிவுகளை பகிர்ந்து கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054183
***
IR/RS/KV/DL
(Release ID: 2054233)
Visitor Counter : 46