சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாள் சிந்தனை முகாம்

Posted On: 09 SEP 2024 9:18PM by PIB Chennai

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆக்ராவில் இரண்டு நாள் சிந்தனை முகாம்  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணை அமைச்சர்கள் திரு பி.எல்.வர்மா மற்றும் ஸ்ரீ ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் சமூக, பொருளாதார அதிகாரமளித்தலை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை மறுஆய்வு செய்வது குறித்த இந்த சிந்தனை முகாமில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக நீதி / சமூக நலத் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளும் இந்த மாநாடு, அரசின் முன்முயற்சிகளை மதிப்பாய்வு செய்வதற்கும் விளிம்பு நிலை சமூகங்களுக்கான எதிர்கால கொள்கை சார்ந்த உத்திகளை வகுப்பதற்கும் ஒரு தளமாகும்.

இந்த முகாமில் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூகம் சார்ந்த அதிகாரமளித்தல், குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் சமூக வலுவூட்டல், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய சமூக நல முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த அமர்வு, சமூக அதிகாரமளித்தலுக்கான அரசின் முழுமையான அணுகுமுறையை வலுப்படுத்தியது. விளிம்பு நிலை சமூகங்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் சட்ட, சமூக மற்றும் நலன் சார்ந்த  கட்டமைப்புகள் இருப்பதை உறுதி செய்தது.

இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் ஒரு துடிப்பான கலாச்சார நிகழ்ச்சியுடன் முதல் நாள் நிகழ்வு நிறைவடைந்தது. இது விளிம்புநிலை சமூகங்களின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி அதிகாரமளித்தலுக்கான அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053292    

***

LKS/RS/RR


(Release ID: 2053433) Visitor Counter : 60


Read this release in: English , Urdu