பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-பிரான்ஸ் இடையேயான இருதரப்பு கடற்படை பயிற்சி மத்திய கடல்பகுதியில் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2024 6:05PM by PIB Chennai

இந்தியா-பிரான்ஸ் இடையே மத்திய கடல்பகுதியில் 2024 செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கிய இருதரப்பு கடற்படை பயிற்சி 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் தபார் பங்கேற்றுள்ளது. பிரான்ஸ் கடற்படை சார்பில் டாஃபின் உள்ளிட்ட கப்பல்கள் பங்கேற்கின்றன.  இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் தபாருக்கு  கேப்டன் எம் ஆர் ஹரீஷ் தலைமையில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1 வரை பிரான்சில் உள்ள டவ்லோனுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.

2001-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் இருதரப்பு கடற்படை பயிற்சியான வருணா, இந்தியா-பிரான்ஸ் நட்புறவுக்கு முதுகெலும்பாக திகழ்கிறது.

***

SMB/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2052665) வருகையாளர் எண்ணிக்கை : 123
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी