மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடை பராமரிப்புத் துறையின் திட்டங்களை, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், சுய உதவிக் குழுக்களுடன் ஒருங்கிணைக்கும் நோக்கில் காணொலிக் கருத்தரங்கம் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2024 2:32PM by PIB Chennai

கால்நடை பராமரிப்புத் துறையின் திட்டங்களை, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (என்ஆர்எல்எம்) கீழ் சுய உதவிக் குழுக்களுடன் ஒருங்கிணைப்பது நேற்று (04.09.2024) காணொலி கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கால்நடை பராமரிப்புத் துறையின் திட்டங்களை, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுத்த இரு துறைகளும் கூட்டு முயற்சியாக செயல்படுவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா தலைமையில் இந்த காணொலிக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங்கும் பங்கேற்றார் இருந்தார். மொத்தம் 9500 உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் உரையாற்றிய திருமதி அல்கா உபாத்யாயா பால்வளத் துறையில் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கோழி, பன்றி, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் போன்ற சிறிய பிராணிகள் கிராமப்புற பெண்களுக்கு வருமானம், ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கான ஆதாரமாக உள்ளன என்றும் அவர் கூறினார். எனவே, கிராமப்புற மகளிரிடையே இத்தொழிலை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். கால்நடைகளுக்கான காப்பீட்டை அதிகரிக்க அவர் வலியுறுத்தினார். 

சுய உதவிக் குழு உறுப்பினர்களிடையே கால்நடை வளர்ப்பு மிகவும் பிரபலமான செயல்பாடு என்றும், லட்சாதிபதி சகோதரிகள் முன்முயற்சியின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை அடைய உதவும் நடவடிக்கைகளில் ஒன்றாக இது இருக்கும் என்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் கூறினார்.  விழிப்புணர்வை ஏற்படுத்தும் இது போன்ற கருத்தரங்கங்களின் முக்கியத்துவத்தை ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் எடுத்துரைத்தார்.

***

PLM/KV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2052308) வருகையாளர் எண்ணிக்கை : 80
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी