மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தயாரிப்புக் கண்டுபிடிப்பு, மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான மின்னணுவியல் துறையின் புத்தொழில் விரைவு நடைமுறையின் 2-வது கூட்டு செயல்பாட்டு திட்டமான சம்ரித்தை மத்திய மின்னணுவியல் துறைச் செயலாளர் தொடங்கி வைத்தார்
Posted On:
05 SEP 2024 2:04PM by PIB Chennai
மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மென்பொருள் தயாரிப்புகளுக்கான தேசிய கொள்கை (NPSP) - 2019-ன் கீழ் இந்தியாவின் மென்பொருள் தயாரிப்பு துறையின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறது. சிறப்பு மையம், தொழில்நுட்ப தொழில் பாதுகாப்பு, தொழில்முனைவோர் மேம்பாட்டுத் (TIDE) திட்டம், அடுத்த தலைமுறை தொழில் பாதுகாப்புத் திட்டம் (NGIS), தகவல் தொழில் நுட்ப சவால்கள், புதுமையான புத்தொழில்களுக்கு ஆதரவு (GENESIS) போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்திய மென்பொருள் தயாரிப்பு தொழில்துறைக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.
சம்ரித் (SAMRIDH) என்பது மென்பொருள் தயாரிப்புகளுக்கான தேசிய கொள்கை - 2019-ன் கீழ் புத்தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை முடுக்கிவிடுவதற்கான மின்னணுவியல் துறையின் முதன்மைத் திட்டமாகும். ஆகஸ்ட் 2021-ல் தொடங்கப்பட்ட சம்ரித் திட்டம், 4 வருட காலப்பகுதியில் ரூ. 99 கோடி செலவில் 300 மென்பொருள் தயாரிப்பு புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தயாரிப்புகளை சந்தைக்கு ஏற்றதாக மாற்றுதல், வணிகத் திட்டம், முதலீட்டாளர் இணைப்பு, சர்வதேச விரிவாக்கம், அமைச்சகத்தின் மூலம் ரூ.40 லட்சம் வரை நிதியுதவி போன்ற சேவைகளை வழங்கி சம்ரித் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை மின்னணுவியல் அமைச்சகத்தின் புத்தொழில் மைய டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் செயல்படுத்துகிறது .
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இரண்டாவது கூட்டு சம்ரித் திட்டத்தை நேற்று (2024 செப்டம்பர் 4) மின்னணுவியல் துறைச் செயலாளர் திரு கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 300 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் இலக்கை அடைவதன் ஒரு பகுதியாக 125 புத்தொழில் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து ஆதரிப்பது மத்திய அரசின் 100 நாள் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆர்வமுள்ள புத்தொழில் நிறுவனங்கள் சம்ரித்தின் 2-வது குழு நடைமுறைக்கு விண்ணப்பிக்கலாம்
இணைய தள முகவரி: https://msh.meity.gov.in/schemes/samridh
***
PLM/KV
(Release ID: 2052251)
Visitor Counter : 57