புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்வாழ் வளங்கள் மற்றும் சூழலியல் மையம், இந்தியப் பெருங்கடல் பல்லுயிர் தகவல் அமைப்பு குறித்த தேசிய அளவிலான பயிலரங்கை ஏற்பாடு செய்கிறது

Posted On: 03 SEP 2024 6:59PM by PIB Chennai

புவி அறிவியல் அமைச்சகத்தின் இணைக்கப்பட்ட அலுவலகமான கடல்வாழ் வாழ்க்கை வளங்கள் மற்றும் சூழலியல் மையம் (சி.எம்.எல்.ஆர்.இ), செப்டம்பர் 03, 2024 அன்று அதன் கொச்சி வளாகத்தில் இந்தியப் பெருங்கடல் பல்லுயிர் தகவல் அமைப்பு குறித்த தேசிய அளவிலான  பயிலரங்கை நடத்தியது. இந்த பயிலரங்கில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்களிடையே கடல் பல்லுயிர் தரவு ஆவணப்படுத்தல் மற்றும் வெளியீடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த  இந்நிகழ்வு உதவியது.

 

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன், பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியதற்காக சி.எம்.எல்.ஆர்.இக்கு வாழ்த்து தெரிவித்தார். "இந்தியாவின் ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் ஆழ்கடல் பல்லுயிர் ஆய்வு மற்றும் பாதுகாப்புஇயக்கத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கு இன்றியமையாதது. இது  நிலையான வளர்ச்சி இலக்குகள் -14 உடன் நேரடியாக ஒத்துப்போகிறது" என்று அவர் கூறினார். 

 

சி.எம்.எல்.ஆர்.இ இயக்குநர் டாக்டர் ஜி.வி.எம் குப்தா, பயிலரங்கின்  தொடக்க விழாவில், கடல் பல்லுயிர் ஆவணப்படுத்தல் மற்றும் தரவு பகிர்வை மேம்படுத்துதல், நீர்வாழ் வளங்களின் நிலையான நிர்வாகத்தை ஆதரித்தல் மற்றும் கடல் பல்லுயிர் அறிவுசார்  பகிர்வில் பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இந்தியப் பெருங்கடல் பல்லுயிர் தகவல் அமைப்பின்  முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2051459

 

 

 

 

***

 


(Release ID: 2051635) Visitor Counter : 47


Read this release in: English , Urdu , Hindi