தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இந்தியா அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை வழங்கி வருகிறது – குஜராத் பிராந்திய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் கிருஷ்ண குமார் யாதவ்

Posted On: 31 AUG 2024 6:06PM by PIB Chennai

இந்தியா அஞ்சல்  பணப்பட்டுவாடா வங்கிஅதன் 6 ஆண்டு பயணத்தில் பல புதிய பரிமாணங்களை நிறுவியுள்ளது. இன்று கிராமப்புறங்களில் நிதி உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் இந்தியா துறையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் சமூகத்தின் கடைக்கோடிக்கும் எளிதாக சென்றடைகின்றன.

இந்தியா அஞ்சல்  பணப்பட்டுவாடா  வங்கியின் 7 வது நிறுவன தினத்தை முன்னிட்டு அகமதாபாத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அகமதாபாத் வடக்கு குஜராத் பிராந்தியத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு  கிருஷ்ண குமார் யாதவ் இவ்வாறு கூறினார்.  இந்திய அஞ்சல் பணப் பட்டுவாடா வங்கியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளை அவர் கௌரவித்தார்.

இந்தியா அஞ்சல்  பணப்பட்டுவாடா வங்கி, 2018  செப்டம்பர் 1 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. குஜராத் வட்டத்தில் இந்த வங்கியில் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டில், குஜராத்தில்  இதுவரை 1.19 லட்சம் பேருக்கு இந்த வங்கி தனது சேவைகளை வழங்கியுள்ளது. 

 

போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு. கிருஷ்ண குமார் யாதவ், தொலைதூரப் பகுதிகளிலும் கூட காகிதமற்ற, ரொக்கமில்லா மற்றும் தற்போதையமற்ற வங்கி வசதிகளை வழங்குவதன் மூலம் இந்திய அஞ்சல் பணப் பட்டுவாடா வங்கி அமைப்பை மாற்றியமைத்துள்ளது என்று கூறினார்.

இந்த வங்கியில் வாடிக்கையாளர்களில் 44% பெண்கள், இது பெண்கள் அதிகாரம் பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

********

PKV/DL



(Release ID: 2050481) Visitor Counter : 48


Read this release in: English , Urdu , Hindi , Gujarati