சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஜன்மாஷ்டமியை முன்னிட்டு 'சர்வ தர்ம கலந்துரையாடலுக்கு' தேசிய சிறுபான்மையினர் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது
Posted On:
29 AUG 2024 5:47PM by PIB Chennai
தேசிய சிறுபான்மையினர் ஆணையம் 2024, ஆகஸ்ட் 27 அன்று புதுதில்லியில், ஜன்மாஷ்டமியை முன்னிட்டு 'சர்வ தர்ம கலந்துரையாடல்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா, தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் திரு இக்பால் சிங் லால்புரா, துணைத் தலைவர் திரு கெர்சி கைகுஷ்ரூ தேவூ ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், பிஜேபி-யின் மத்திய நாடாளுமன்றக்குழு மற்றும் தேர்தல் குழு உறுப்பினர் டாக்டர் சத்யநாராயண் ஜாட்டியா, உலக புற்றுநோய் பராமரிப்பு அமைப்பின் சர்வதேச தூதர் திரு குல்வந்த் சிங் தலிவால், இங்கிலாந்தை சேர்ந்த தர்ம குரு பாபா நவுனிஹால் சிங், பாபா குர்பிரீத் சிங் (பஞ்ச் பியாரா குடும்பத்தின் வாரிசுதாரர்), கோஸ்வாமி சுஷில் ஜி மகாராஜ், சுவாமி சந்தர் சர்மா, செல்வி சுனந்தா ஜெயின், ஆச்சார்யா யேஷிஜி, ஸ்ரீ தல்விந்தர் சிங் மார்வா (முன்னாள் எம்.எல்.ஏ), பர்விந்தர் சிங், குளோபல் பஞ்சாபி அசோசியேஷன், டாக்டர் ஜஸ்விந்தர் சிங் தில்லான், குரு காசி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், திரு கபில் கன்னா, திரு அவினாஷ் ஜெய்ஸ்வால், சமூக சேவகர் திரு வரிந்தர் சச்தேவா, டாக்டர் கோமல் வஷிஷ்ட், திருமதி கமல்ஜீத் கவுர், திரு கோல்டி சிங், திரு குல்விந்தர் சிங், திரு ஜதிந்தர் சிங் சாஹ்னி, முகமது ஷமி. ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பல்வேறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பேச்சாளர்கள், சகோதரத்துவத்தின் செய்தியையும், அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவதையும், சர்வ தர்ம சத்பவத்தையும், "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்ற அரசாங்கத்தின் தெளிவான அழைப்பின் கீழ், அனைத்து சமூகங்களின் உள்ளடக்கம் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
***
MM/KPG/DL
(Release ID: 2049895)
Visitor Counter : 46