பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மாலத்தீவு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக குடிமைப்பணி ஆணையத்திடமிருந்து நல்லாட்சிக்கான தேசிய மையம் பெரும் பாராட்டுக்களைப் பெறுகிறது

Posted On: 29 AUG 2024 5:56PM by PIB Chennai

2024 – 2029-ம் ஆண்டு வரையிலான, ஐந்தாண்டு காலத்திற்கு மாலத்தீவு குடிமைப்பணி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான இந்தியா-மாலத்தீவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அமலாக்க வழிமுறைகளை உறுதிப்படுத்துவதற்காக, நல்லாட்சிக்கான தேசிய மைய  தலைமை இயக்குநர் திரு வி சீனிவாஸ் மற்றும் மாலத்தீவு குடிமைப்பணி ஆணையத் தலைவர் திரு முகமது நசிஹ் ஆகியோருக்கு இடையே 2024, ஆகஸ்ட் 29 அன்று இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.

இந்திய அரசின் நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் மாலத்தீவு குடியரசின் மாலத்தீவு குடிமைப்பணி ஆணையம் இடையே 1000 மாலத்தீவு குடிமைப்பணி அதிகாரிகளின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஆகஸ்ட் 9 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் திரு மூசா ஜமீர் ஆகியோர் 2024-2029 காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தனர்.

ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் மாலத்தீவு தகவல் ஆணைய அலுவலகம் திட்டங்கள் உட்பட மாலத்தீவின் நிரந்தர செயலாளர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகள் உட்பட மொத்தம் 1000 குடிமைப் பணி அதிகாரிகளுக்கு கள நிர்வாகத்தில் மொத்தம் 32 திறன் மேம்பாட்டு திட்டங்களில் பயிற்சி அளித்ததன் மூலம் 2024-ம் ஆண்டில், நல்லாட்சிக்கான தேசிய மையம் குறிப்பிடத்தக்க சிறப்பை எட்டியது.

இந்த ஒத்துழைப்பின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில், மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு புதுப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்த புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மை, பொதுக் கொள்கை, ஆளுமை மற்றும் கள நிர்வாகம் ஆகியவற்றில் மாலத்தீவு குடிமைப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதுடன், இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049845

***

IR/RS/DL



(Release ID: 2049894) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi