அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஃபைசோஎலக்ட்ரிக் பாலிமர் நானோ கலப்பு பொருளின் உருவாக்கம் ஆற்றல் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படலாம்.

प्रविष्टि तिथि: 28 AUG 2024 5:45PM by PIB Chennai

ஒரு புதிய ஃபைசோஎலக்ட்ரிக் பாலிமர் நானோ கலப்பு பொருளின் உருவாக்கம், அழுத்தம் உணர்தல் மற்றும் ஆற்றல் வளர்ச்சி பயன்பாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான நானோ அறிவியல் மையத்தின் (சி.இ.என்.எஸ்) ஆராய்ச்சியாளர்கள், புனேவின் தேசிய வேதியியல் ஆய்வகத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்-என்.சி.எல்) விஞ்ஞானிகளுடன் இணைந்து ஃபைசோஎலக்ட்ரிக் பாலிமர் நானோ கலவை அடிப்படையில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த வளர்ச்சி பொருத்தமான படிக அமைப்பு மற்றும் மேற்பரப்பு பண்புகளைக் கொண்ட உலோக ஆக்சைடு நானோ பொருட்கள் ஒரு பாலிமர் கலவையில் கலப்படங்களாகப் பயன்படுத்தப்படும்போது, அழுத்தமின் எதிர் செயலில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது என்பதைக் கண்டறிந்ததன் அடிப்படையில் அமைந்தது.

பெங்களூரில் உள்ள நானோ அறிவியல் மையம் மற்றும் புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகம் (சி.எஸ்.ஐ.ஆர்-என்.சி.எல்) ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழு அழுத்தம் உணர்திறன் மற்றும் ஆற்றல் வளர்ச்சி பயன்பாடுகளுக்கான பாலிமர் நானோ கலப்பு பொருளை வெற்றிகரமாக தயாரித்துள்ளது.

இந்த ஆய்வு சமீபத்தில் அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி சஞ்சிகையான ஏ.சி.எஸ்-அப்ளைடு நானோ மெட்டீரியலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, இன்ஸ்பயர்-ஃபேகல்டி பெல்லோஷிப் திட்டத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்பட்ட "சுயமாக இயங்கும் ஆற்றல் உருவாக்கும் மற்றும் அழுத்தத்தை உணரும் சாதனங்களுக்கான பொருட்கள்" என்ற தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049436

 

BR/KR

***

 


(रिलीज़ आईडी: 2049643) आगंतुक पटल : 100
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी