விவசாயத்துறை அமைச்சகம்
தாயின் பெயரில் மரக்கன்று இயக்கத்தின் கீழ் சிறப்பு மரக்கன்று நடும் சிறப்பு நிகழ்ச்சிக்கு வேளாண் அமைச்சகம் நாளை ஏற்பாடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
28 AUG 2024 6:47PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதன் கீழ் செப்டம்பர் 2024 க்குள் நாடு முழுவதும் 80 கோடி மரக்கன்றுகளையும், மார்ச் 2025 க்குள் 140 கோடி மரக்கன்றுகளையும் நட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, வேளாண் அமைச்சகம் நாளை (29 ஆகஸ்ட் 2024) மத்திய வேளாண் அமைச்சரின் முன்னிலையில் மரக்கன்று நடும் இயக்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் சுமார் 1 ஏக்கர் நிலத்தில் மரக்கன்று நடும் இயக்கம் நடைபெறவுள்ளது. இதில் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், அமைச்சகத்தின் 200 அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்வார்கள்.
***
PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2049535)
आगंतुक पटल : 85