பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
செயற்கை நுண்ணறிவு ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் : மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி
Posted On:
23 AUG 2024 7:12PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்திற்கான அகில இந்திய முன்முயற்சி (AIICE)' என்ற நிகழ்ச்சியை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார். இந்தியாவின் படைப்பாற்றல் சார்ந்த தொழில்கள் ஒன்றிணைந்து படைப்பாற்றல் பொருளாதாரம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் ஒத்துழைக்கக்கூடிய ஒரு மன்றத்தை உருவாக்கியதற்காக இந்திய வர்த்தக சபையை அவர் பாராட்டினார்.
படைப்பாற்றல் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான வருடாந்திர வருவாயை உருவாக்குகிறது என்றும் உலகளவில் கிட்டத்தட்ட 50 மில்லியன் வேலைகளைக் கொண்டுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தியாவில், "படைப்புத் தொழில் இப்போது 30 பில்லியன் டாலர் தொழிலாக உள்ளது என்றும் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார். படைப்பாற்றல் பொருளாதாரத்தில் டிஜிட்டல் மயமாக்கலின் ஆழமான தாக்கத்தை அவர் வலியுறுத்தினார். இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு மகத்தான வாய்ப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் அச்சுறுத்தல் அல்ல என்றும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு முன்வைக்கும் சவால்களை திறம்பட எதிர்கொள்ள வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
*****************************
PLM/KV
(Release ID: 2048450)
Visitor Counter : 46