சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய நட்சத்திர ஆமைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
Posted On:
19 AUG 2024 4:31PM by PIB Chennai
கடந்த 16-ம் தேதி சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு செல்லவிருந்த 3 பயணிகளின் பைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர். அப்போது அந்த பைக்குள் இந்திய நட்சத்திர ஆமைகள் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். உடனடியாக இத்தகவலை வனவிலங்கு குற்றத்தடுப்பு அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வனவிலங்கு ஆய்வாளர் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய நட்சத்திர ஆமைகள் ஏற்றுமதி செய்வதற்கு தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளது என்பதை கண்டறிந்தார்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இது குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
***
IR/AG/KR
(Release ID: 2046652)
Visitor Counter : 82