புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுக்கான தேசிய குறியீடுகளில் சாதனை அளவை நிர்ணயிப்பது குறித்த ஒருநாள் ஆலோசனை புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
16 AUG 2024 6:44PM by PIB Chennai
புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுக்கான தேசிய குறியீடுகளில் சாதனை அளவு மைல்கற்களை அமைப்பது தொடர்பாக அமைச்சகங்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டது. இது தொடர்பான கூட்டம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டது. நித்தி ஆயோக்கின் துணைத் தலைவர் திரு சுமன் கே. பெரி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய குறியீடுகளை ஆய்வு செய்வது குறித்து பல்வேறு அமைச்சகங்கள், துறைகளுக்கு எடுத்துரைக்க இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
புள்ளியியல் துறை தலைமை இயக்குநர் திரு என்.கே. சந்தோஷி வரவேற்புரையாற்றினார். புள்ளியியல் அமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள், குறிப்பாக நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை கண்காணித்தல் தொடர்பான தமது கண்ணோட்டங்களை அவர் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் சிறந்த தரவுகள் கிடைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
புள்ளியியல்,திட்ட அமலாக்கத் துறைச் செயலாளர் டாக்டர் சவுரப் கார்க் தமது உரையில், நிலையான வளர்ச்சி இலக்குகள் தொடர்பான பல முன்முயற்சிகளை எடுத்துரைத்தார். இதில் தேசிய குறியீடு கட்டமைப்பை உருவாக்குதல், புதிய ஆய்வுகள் மூலம் தரவு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள், தரவுத் தேவைகளுக்கு ஏற்ப தற்போதுள்ள ஆய்வுகளை சீரமைத்தல் போன்றவை அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
நித்தி ஆயோக் துணைத் தலைவர் திரு சுமன் பெரி தனது உரையில், நிலையான வளர்ச்சி இலக்குகளில் அமைக்கப்படும் இலக்குகள் முன்னேற்றத்தை அளவிட அனுமதிக்கின்றன என்றார். நித்தி ஆயோக், மத்திய திட்ட செயலாக்க அமைச்சகம், இதர தொடர்புடைய அமைச்சகங்களுக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய அமைச்சகங்கள், துறைகள், மத்திய திட்ட அமலாக்க அமைச்சகம், நித்தி ஆயோக் ஆகியவற்றின் அதிகாரிகள் தங்கள் அமைச்சகம் / துறைகளில் மேற்கொள்ளப்படும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் தொடர்பான பணிகளைக் எடுத்துரைத்தனர். மத்திய அரசின் கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர் பிரவீன் சுக்லா நன்றியுரை வழங்கினார்.
**************************
PLM/KV
(Release ID: 2046262)
Visitor Counter : 30