பாதுகாப்பு அமைச்சகம்
‘நிபுன்’ ஆயுதத்திற்கான தயாரிப்பு விவரங்களை, தர உத்தரவாத தலைமை இயக்குநரிடம் டிஆர்டிஓ சமர்ப்பித்துள்ளது
प्रविष्टि तिथि:
16 AUG 2024 5:29PM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), நிபுன் ஆயுதம் தயாரிப்பு குறித்த விவரங்களை, புனேவில் உள்ள போர்த்தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தர உத்தரவாத தலைமை இயக்குநரிடம் சமர்ப்பித்துள்ளது.
நிபுன் ஆயுதம், புனேயில் உள்ள போர்த்தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், உயர் சக்தி சாதன ஆராய்ச்சி ஆய்வகத்துடன் இணைந்து தயாரித்த மெல்லிய தாக்குதலுக்கான ஆயுதமாகும்.
நிபுன் ஆயுதம், தர உத்தரவாத பரிசோதனைகளுக்குப் பிறகு இந்திய ராணுவத்தில் ஈடுபடுத்தப்படும். இந்த ஆயுதத்தை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, நாக்பூரைச் சேர்ந்த எகனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனம் மற்றும் செகந்திராபாத்தைச் சேர்ந்த பிரிமியர் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனங்கள் டிஆர்டிஓவிடமிருந்து பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2045992
***
MM/AG/DL
(रिलीज़ आईडी: 2046053)
आगंतुक पटल : 92