புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 2024 ஜூன் மாதத்தில் 4.2% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
Posted On:
12 AUG 2024 5:30PM by PIB Chennai
2024 ஜூன் மாதத்திற்கு, அடிப்படை 2011-12 உடன் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் 2023 ஜூன் மாதத்தில் 143.9-க்கு எதிராக 150.0 ஆக உள்ளது. 2024, ஜூன் மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீடுகள் முறையே 134.9, 145.3 மற்றும் 222.8 ஆக உள்ளன.
பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாட்டின்படி, 2024, ஜூன் மாதத்தில் முதன்மை பொருட்களுக்கு 156.0, மூலதன பொருட்களுக்கு 110.0, இடைநிலை பொருட்களுக்கு 159.0 மற்றும் உள்கட்டமைப்பு / கட்டுமான பொருட்களுக்கு 178.4 குறியீடுகள் உள்ளன. மேலும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர்வோர் அல்லாத நீடித்த பொருட்களுக்கான குறியீடுகள் 2024, ஜூன் மாதத்தில் முறையே 126.9 மற்றும் 144.6 ஆக உள்ளன.
2024 ஜூன் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 4.2 சதவீதமாகும்.
2023, ஜூன் மாதத்தை விட 2024 ஜூன் மாதத்தில் பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாட்டின்படி தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியின் தொடர்புடைய வளர்ச்சி விகிதங்கள் முதன்மை பொருட்களில் 6.3 சதவீதம், மூலதன பொருட்களில் 2.4 சதவீதம், இடைநிலை பொருட்களில் 3.1 சதவீதம், உள்கட்டமைப்பு/ கட்டுமான பொருட்களில் 4.4 சதவீதம், நுகர்வோர் சாதனங்களில் 8.6 சதவீதம் மற்றும் நுகர்வோர் நீடித்தவற்றில் -1.4 சதவீதம் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044601
***
IR/RS/DL
(Release ID: 2044647)
Visitor Counter : 94