அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம் உலக உயிரி எரிபொருள் தினத்தை கொண்டாடியது
Posted On:
10 AUG 2024 7:32PM by PIB Chennai
மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம், உலக உயிரி எரிபொருள் தினத்தை இன்று அதன் புதுதில்லி வளாகத்தில் உயிரி எரிபொருள் மற்றும் கார்பன் பிடிப்பு தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்களை காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு நிகழ்வுடன் கொண்டாடியது.
நிகர பூஜ்ஜிய உமிழ்வின் உலகளாவிய மற்றும் தேசிய இலக்குக்கு பங்களிக்கும் மேம்பட்ட உயிரி எரிபொருட்களில் யோசனை, வெளிப்பாடு மற்றும் வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்க மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தலைமை விருந்தினரும், இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உயிரி எரிபொருள் பணிக்குழுவின் முன்னாள் தலைவரும், உயிரி எரிபொருள் பணிக்குழுவின் தற்போதைய உறுப்பினர் நிபுணருமான திரு ராமகிருஷ்ணா முக்கிய உரையாற்றினார். 'மேம்பட்ட உயிரி எரிபொருட்களுக்கான இந்தியாவில் வளர்ந்து வரும் கொள்கை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் 2070 க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான வாய்ப்புகள்' என்ற தலைப்பில் அவரது பேச்சு, இந்தியாவில் தற்போதைய கொள்கை கட்டமைப்பு, வாய்ப்புகள் மற்றும் உயிரி எரிபொருட்களின் எதிர்காலம் குறித்து வெளிச்சம் போட்டது.
இந்த நிகழ்ச்சியில் தில்லி பல்கலைக்கழகத்தின் மூன்று முதன்மையான கல்லூரிகள் மற்றும் இரண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.
****
PKV/DL
(Release ID: 2044168)
Visitor Counter : 83