விவசாயத்துறை அமைச்சகம்

உணவுப் பயிரிலிருந்து பணப்பயிருக்கு மாற்றம்

Posted On: 09 AUG 2024 6:01PM by PIB Chennai

மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையால் 2024 ஜூன் 4, அன்று வெளியிடப்பட்ட 3-வது முன்கூட்டிய மதிப்பீடுகள் 2023-24-ன் படி, வணிக/பணப்பயிர்களின் பரப்பளவு 2021-22 விவசாய ஆண்டில் 18,214.19 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து, 2023-24 விவசாய ஆண்டில் 18,935.22 ஆயிரம் ஹெக்டேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. வணிக/பணப்பயிர்களின் (கரும்பு, பருத்தி, சணல் & மெஸ்டா) உற்பத்தியும் 2021-22 விவசாய ஆண்டில் 4,80,692 ஆயிரம் டன்களில் இருந்து 2023-24 விவசாய ஆண்டில் 4,84,757 ஆயிரம் டன்களாக அதிகரித்துள்ளது.

நிதி ஆயோக் பணிக்குழு அறிக்கை, 2018-ன்படி, எதிர்கால 2032-2033 ஆம் ஆண்டில் உணவு தானியங்களின் தேவை மற்றும் வழங்கல், முறையே 337.01 மில்லியன் டன்கள் மற்றும் 386.25 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது / கணிக்கப்பட்டுள்ளது, இது உணவுப் பாதுகாப்பைப் பொருத்தவரை ஒட்டுமொத்த உணவு தானியங்கள் மிகவும் வசதியான நிலையில் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

நாட்டின் 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் (ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்) பரப்பு விரிவாக்கம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை செயல்படுத்தி வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், மாநில அரசுகள் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட செயல்முறைகள் குறித்த தொகுப்பு செயல்விளக்கங்கள், பயிர் சாகுபடி முறைகள் குறித்த செயல்விளக்கங்கள், உயர் விளைச்சல் ரகங்கள் / வீரிய ஒட்டு ரகங்களின் விதைகள் விநியோகம், மேம்படுத்தப்பட்ட பண்ணை இயந்திரங்கள் / வள பாதுகாப்பு இயந்திரங்கள் / கருவிகள், திறமையான நீர் பயன்பாட்டு கருவிகள், பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஊட்டச்சத்து மேலாண்மை / மண் மேம்பாடு போன்ற இடையீடுகளுக்கு மாநில அரசுகள் மூலம் உதவிகள் வழங்கப்படுகின்றன. பதனிடுதல், அறுவடைக்குப் பிந்தைய உபகரணங்கள், விவசாயிகளுக்கு பயிர் திட்டம் சார்ந்த பயிற்சிகள் போன்றவை. இந்த இயக்கம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (.சி..ஆர்) மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் / வேளாண் அறிவியல் மையங்கள் (கே.வி.கே) ஆகியவற்றிற்கு தொழில்நுட்ப பின்னடைவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக, நிபுணர்கள் / விஞ்ஞானிகளின் மேற்பார்வையின் கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் செய்ய ஆதரவு அளிக்கிறது.

மேலும், அதிக முதலீடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், நுகர்வோரின் நலன்களை பாதுகாக்கவும், நியாயமான விலையில் நுகர்வோரின் விளைபொருட்களுக்கு ஆதாயமான விலை கிடைப்பதை அரசு தனது விலைக் கொள்கையின் மூலம் உறுதி செய்கிறது. இந்த வகையில், வணிக / பணப்பயிர்கள் உள்ளிட்ட 22 (22) கட்டாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு அறிவிக்கிறது. 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், குறைந்தபட்ச ஆதரவு விலையை உற்பத்திச் செலவில் ஒன்றரை (1.5) மடங்கு அளவில் வைத்திருக்க முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கொள்கையை அறிவித்தது. அதன்படி, 2018-19 வேளாண் ஆண்டு முதல் ஒட்டுமொத்த இந்திய எடையிடப்பட்ட சராசரி உற்பத்தி செலவை விட குறைந்தபட்சம் 50 சதவீத வருவாயுடன், வணிக / பணப்பயிர்கள் உள்ளிட்ட அனைத்து கட்டாய பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு அறிவித்து வருகிறது. நாட்டில் பயிர்களின் உற்பத்தியையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க அரசு பல்வேறு கொள்கைகள், சீர்திருத்தங்கள், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சில முக்கிய திட்டங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:

1. பிரதமரின் கிசான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவு

2. பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டம் PMFBY)

3. வேளாண் துறைக்கான நிறுவனக் கடன்

4. நாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்

 

5. ஒரு துளி நீரில் அதிக பயிர்

6. நுண்ணீர் பாசன நிதி

7. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஊக்குவித்தல்

8. வேளாண் இயந்திரமயமாக்கல்

9. விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்குதல்

10. தேசிய வேளாண் சந்தை விரிவாக்க தளம் அமைத்தல்

11. வேளாண் உள்கட்டமைப்பு நிதி (AIF)

12. வேளாண் விளைபொருள் தளவாடங்களை மேம்படுத்துதல், கிசான் ரயில் அறிமுகம்.

13. வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பை உருவாக்குதல்

14. வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை

15. மத்திய அரசின் திட்டம் நமோ ட்ரோன் தீதி.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

***

MM/AG/DL



(Release ID: 2043912) Visitor Counter : 5


Read this release in: English , Urdu , Hindi